டி20 உலக கோப்பை: இலங்கை-இங்கிலாந்து இன்று மோதல்.. ரிசல்டுக்காக காத்திருக்கிறது தென் ஆப்பிரிக்கா Share

இன்று நடைபெறும் சூப்பர்-10 ஆட்டத்தில் இங்கிலாந்தை இலங்கை வீழ்த்தினால்தான் அரையிறுதிக்கான தங்களின் வாய்ப்பு எஞ்சியிருக்கும் என்ற சூழலில், போட்டி முடிவை தென் ஆப்பிரிக்க அணியும், அதன் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.

உலக கோப்பை கிரிக்கெட், குரூப் 1 பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.

இந்த பிரிவில் இருந்து அரைஇறுதிக்கு நுழைய இங்கிலாந்து, இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய 3 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

இதில் ஒன்றுதான் அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற நிலையில், இங்கிலாந்து- இலங்கை அணிகள் இடையே இன்று இரவு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில், மோதல் நடக்கிறது.

இங்கிலாந்து வென்றால் 6 புள்ளியுடன் அரை இறுதிக்கு தகுதி பெறும். நடப்பு சாம்பியனான இலங்கை, தென்ஆப்பிரிக்கா வெளியேற்றப்படும். மாறாக இலங்கை அணி வெற்றி பெற்றால் 4 புள்ளியை பெறும். கடைசி வீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினால் அந்த அணி தகுதிபெற்று விடும்.

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா வெளியேற்றப்படும். இன்றைய ஆட்டத்தில் இலங்கை வென்று கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றால் 3 அணிகள் (இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா) 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். நிகர ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி தகுதி பெறும்.

எனவே இன்றைய ஆட்டம் பரபரப்பானதாக இருக்கும்.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com