இந்திய அணியின் சுவராக செயல்படுகிறார் கோலி ! அஃப்ரிடி புகழாரம் Share

இந்திய கிரிக்கெட் அணியின் சுவராக இருந்த சச்சின் டெண்டுல்கராக, கோலி உருவாகி வருவதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மொஹாலியில் ஆஸ்திரேலிய அணியுடனான தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அஃப்ரிடி இவ்வாறு தெரிவித்தார். சுவர் போல நிலைத்து நின்று ஆடி, சச்சின் டெண்டுல்கர், இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தருவார் என்றும், அதே போல தற்போது விராட் கோலி ஆடி வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் செல்வதாக கூறினார்.
 

20 ஓவர் உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், இறுதி ஆட்டத்தில் அடைந்த தோல்வி பற்றி குறிப்பிட்ட அஃப்ரிடி, பேட்டிங்-கில் போதிய திறமை வெளிப்படவில்லை என்றும், கடைசி நேரத்தில் பவுலர்கள் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.
 

அஃப்ரிதி தலைமையிலான பாகிஸ்தான் அணி, 20 ஓவர் உலக கோப்பை தொடரில் 4 லீக் ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com