நியூசிலாந்தின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் பங்களாதேஷ் படுதோல்வி.. Share

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இடம்பெற்ற உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் நியூசிலாந்து அணி 75 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8  விக்கட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பாக அதன் தலைவர் கேன் வில்லியம்ஸன் 42 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

146 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 15.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com