Loading...

தக்காளி தயிர் பச்சடி Share

தேவையான பொருட்கள் : பழுத்த தக்காளி – 2, தேங்காய் துருவல் – அரை கப் புளிக்காத தயிர் – ஒரு கப், பச்சைமிளகாய் – 2, பொடியாக கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

* தக்காளி, ப.மிளகாயை கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தயிரை போட்டு இதில் நறுக்கிய தக்காளி, கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாய், தேங்காய் துருவல், உப்பு போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

* அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கடுகு தாளித்து தயிர் கலவையில் கொட்டுங்கள்.

* சுவையான தக்காளி தயிர் பச்சடி ரெடி.

* இதில் மாதுளை முத்துக்களை சேர்த்துக் கொள்ளலாம். பிரியாணிக்கும், சப்பாத்திக்கும் ருசிகூட்டும் கலர்ஃபுல் பச்சடி.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com