தெறிக்கவிட்ட கோலி! இந்தியா 192 ரன் குவித்தது! Share

20 ஓவர்களின் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. கோலி அபாரமாக ஆடி 89 ரன்கள் குவித்தார், ரஹானே 40 ரன்களும், ரோஹித் 43 ரன்களும் குவித்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் கோலிக்கு மட்டும் 4 விக்கெட் வாய்ப்புகளை கோட்டை விட்டனர்.

இந்த தொடரில் இந்தியாவின் துவக்க பார்ட்னர்ஷிப் முதல் முறையாக 50 ரன்னை கடந்தது. துவக்க வீரர் ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி 43 ரன்களை குவித்தார். நட்சத்திர வீரர் கோலியை 1 ரன்னில் இருந்தபோது இரண்டுமுறை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் தவறவிட்டனர். இந்தியா 200 ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டிக்குள் நுழையும் இரண்டாவது அணியை முடிவு செய்யும் அரையிறுதியில், டாஸ் வென்ற மே.இ தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் யுவராஜ் சிங்குக்கு பதிலாக மனிஷ் பாண்டேவும், தவானுக்கு பதில் ரஹானேவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இந்திய அணியில் கோலியை தவிர யாரும் சிறந்த பேட்ஸ்மேன் இல்லை என்று கெயில் கூறியிருக்கிறார். கெயிலை வீழ்த்த அஸ்வின் ஆயுதமாக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com