சுழன்றடித்த சிம்மன்ஸ்; சுருண்டுபோன இந்தியா (Video) Share

மும்­பையில் நடை­பெற்ற உலகக் கிண்ண இரு­ப­துக்கு 20 தொடரின் அரை­யி­று­தியில் இந்­திய அணியை 7 விக்­கெட்­டுகள் வித்­தி­யா­சத்தில் வீழ்த்தி மேற்­கிந்­தியத் தீவுகள் அணி, இறுதிப் போட்­டியில் இங்­கி­லாந்தை சந்­திக்­கி­றது.



193 ஓட்­டங்கள் என்ற மிகப்­பெ­ரிய இலக்கைத் துரத்­திய மே.இ.தீவுகள் அணி 19.4 ஓவர்­களில் 3 விக்­கெட்­டு­க்களை மாத்­திரம் இழந்து 196 ஓட்­டங்­களை எடுத்து அபார வெற்றி பெற்று இந்­தி­யாவை வெளி­யேற்­றி­யது.

கடைசி 2 ஓவர்­களில் 20 ஓட்­டங்கள் தேவை என்ற நிலையில் ஜடே­ஜா­விடம் பந்தைக் கொடுக்க, 19ஆவது ஓவரில் முதல் 4 பந்­து­களில் 2 ஓட்­டங்­க­ளையே கொடுத்தார் ஜடேஜா, ஆனால் அடுத்த பந்தில் ரஸல் நேராக சிக்ஸர் ஒன்றை விளா­சினார். அதோடு இல்­லாமல் கடைசி பந்தை பவுண்­ட­ரி­யுடன் முடிக்க அந்த ஓவரில் 12 ஓட்­டங்­களை சேர்த்­தது மேற்­கிந்­தியத் தீவுகள்.

கடைசி ஓவரில் 8 ஓட்­டங்கள் தேவை என்ற நிலையில் கோஹ்லி­யிடம் கடைசி ஓவர் பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. அவர் 2 பந்­து­களில் 1 ஓட்­டத்­தைத்தான் கொடுத்தார், ஆனால், 3ஆவது பந்தை பவுண்­ட­ரிக்கு விரட்­டினார் ரஸல். பிறகு 4ஆவது பந்தை மிகப்­பெ­ரிய சிக்ஸர் அடிக்க அதுவே வெற்றி சிக்­ஸ­ராக அமைய மே.இ.தீவு­களின் கொண்­டாட்டம் தொடங்­கி­யது.

நேற்­றைய போட்­டியின் ஆட்ட நாயக­னான சிம்மன்ஸ் 3 முறை தப்பிப் பிழைத்தார். ஒரு முறை அஷ்வின் பந்தில் பும்­ரா­விடம் பிடி­கொ­டுக்க அது நோபோ­லாக அமைந்­தது. மீண்டும் ஒரு முக்­கியக் கட்­டத்தில் பாண்­டியா பந்­திலும் பிடி­கொ­டுத்தார். பிடியும் எடுக்­கப்­பட்­டது. ஆனால் அதுவும் நோபோல் ஆனது.

நேற்­றைய போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இந்­திய 2 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து 192 என்ற இமா­லய இலக்கை எட்­டி­யது. இதில் கோஹ்லி ஆட்­ட­மி­ழக்­காமல் 89 ஓட்­டங்­களைப் பெற்றார்.

பதி­லுக்கு ஆட வந்த மேற்­கிந்­தியத் தீவு­களின் கெய்ல் (5), சாமுவல்ஸ் (8) அடுத்­த­டுத்து ஆட்­ட­மி­ழக்க, 2 விக்­கெட்­டு­க­ளுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த சிம்மன்ஸ், சார்லஸ் ஜோடி இந்­திய பந்து வீச்சை புரட்டி எடுத்­து. இரு­வரும் இணைந்து 10.1 ஓவர்­களில் 97 ஓட்­டங்­களை விளா­சினர்.

சார்லஸ் 52 ஓட்­டங்­களை எடுத்து ஆட்­ட­மி­ழந்தார். இதுவும் திருப்பு முனை­யாக அமையும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால் அடுத்து இறங்­கிய ரஸல், சிம்­மன்­ஸுடன் இணைந்து அடுத்த 6.3 ஓவர்­களில் 80 ஓட்­டங்­களை விளா­சி­யதில் இந்­திய அணி­யினால் ஒன்றும் செய்ய முடி­ய­வில்லை, சிம்மன்ஸ் 82 ஓட்­டங்­க­ளையும், அதி­ரடி மன்னன் ரஸல் 43 ஓட்­டங்­க­ளையும் பெற்றனர். மொத்தம் 20 பவுண்டரிகள் 11 சிக்ஸர்கள் அதாவது 146 ஓட்டங்கள் ஓடாமலேயே எடுக்கப்பட்டன. பவர் ஹிட்டிங் என்றால் என்ன என்பதை மே.இ.தீவுகள் நேற்று காண்பித்தது.

 

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com