Loading...

கிளிநொச்சி மாவட்டத்தில் அதி கூடிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் ! Share

உலக கல்விக் கோட்பாட்டின் அடிப்படையில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். ஆனால் கிளிநொச்சியில் 19 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் காணப்படுகின்றார் என வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற  மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளப்படும் போது சித்திரம், சங்கீதம், நடனம் என்பவற்றில் தேவைகளுக்கு மீறி சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
 
ஆனால் தொடர்ச்சியாக கணிதம், விஞ்ஞானம் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே திட்டமிடப்படாத  ஆசிரியர்  ஆட்சேர்ப்பு காரணமாகவே இவை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
 
கிளிநொச்சி மாவட்டத்தின் மாணவர்களின் மொத்த தொகைக்கும் ஆசிரியர்களுக்குமான விகிதாசாரப்படி ஒரு ஆசியருக்கு 19 மாணவர்கள் காணப்படுகின்றனர். ஆனால் உலகத்தின் கல்விக் கோட்பாட்டின் படி ஒரு ஆசிரியருக்கு 35 மாணவர்கள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com