யுவராஜ் சிங் வீட்டில் 8 வயது சிறுவன் பலி! நடந்தது என்ன? Share

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வீட்டில் 8 வயது சிறுவன் மர்மமான முறையில் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



அரியானா மாநிலம் சண்டிகரில் யுவராஜ் சிங் வீடு உள்ளது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் வீட்டின் வாசல் கதவு உடைந்து விழுந்து பலியானதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நடைபெற்ற போது வீட்டில் யாரும் இல்லை. யுவராஜ் சிங் மற்றும் அவரது தாயார் குருகிராமத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த சம்பவத்தின் போது யுவராஜ் சிங் தாயார் அங்கு இருந்ததாகவும், சத்தம் கேட்டு அவர் வெளியே வந்து பார்த்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்த வீடு சமீபத்தில் தான் புதுப்பிக்கப்பட்டு, வாசல் கதவும் மாற்றி அமைக்கப்பட்டிப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com