தன்னைக் காதலிக்க முற்படுபவர்களிடம் இந்த விசயங்கள் உள்ளதா என பெண்கள் எதிர்ப்பார்ப்பார்களாம்!! Share

நக்கலுக்கும், கேலிக் கிண்டலுக்கும் பெண்கள் பணத்தை தான் எதிர்பார்க்கிறார்கள், அவர்களுக்கு மனதே இல்லை என மீம்சுகளும், சமூக வலைத்தளத்தில் பதிவுகளும் இடலாம்.

ஆனால், உண்மையாக அவரவர் வீட்டு பெண்களை மனதில் நினைத்து பேசும் எந்த ஒரு ஆணின் வாயிலும் இதுப் போன்ற பேச்சு வராது.

பெண் ஓர் ஆணை தேர்வு செய்கிறாள் என்றால் கண்டிப்பாக முதலில் தனது பாதுகாப்பை எதிர்பார்க்காமல் தேர்வு செய்யமாட்டாள். இது அத்தியாவசியமும் கூட. தன்னை ஒருவனை நம்பி முழுவதாய் ஒப்படைக்க போகும் பெண் பாதுகாப்பை எதிர்பார்ப்பது தவறே இல்லை…

கட்டுப்படுத்த முடியாத காதல்
நீதான் எனக்கு எல்லாம், மற்றவைகள் எல்லாம் கால் தூசுக்கு சமன் எனும் அளவிற்கு நீங்கள் அவர்களை காதலிக்க வேண்டும். ஐ.டி வேலையில் டார்கெட் எப்படி நாளுக்கு நாள் அதிகரிக்கிறதோ, அதே போல உங்கள் காதலும் நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டும் துளியும் குறைந்துவிடக் கூடாது.

அழகாக உணர்த்த வேண்டும்
காக்கைக்கு தன் குஞ்சு, பொன் குஞ்சு என்பார்கள். அப்படி தான் நீங்கள் அவர்களை நினைக்க வேண்டும். அழகு என்பது மனதில் இருந்தால் போதுமானது. பெண்கள் எப்போதும் மற்ற பெண்களைவிட அழகாக இருக்க வேண்டும் என்பதைவிட, தன் கணவன் / காதலனுக்கு தான் மட்டுமே அழகாக தெரிய வேண்டும் என விரும்புவார்கள்.

பாதுகாப்பு
பெண்கள் ஆண்களிடம் பெரிதாய் எதிர்பார்க்கும் விஷயம் பாதுகாப்பு தான். உங்களை நம்பி பெண்கள் முழுதாய் ஒப்படைப்பதே நீங்கள் பாதுகாப்பாக பார்த்துக் கொள்வீர்கள் என்ற தைரியத்தில் தான்.

வி.ஐ.பி
கடவுளே வந்தாலும், அட கொஞ்சம் பொறுப்பா, நான் என் பொண்டாட்டிய பார்த்துட்டு வந்துர்றேன்… எனும் அளவிற்கு ஓர் வி.வி.ஐ.பி ரேஞ்சில் நீங்கள் அவர்களை நடத்த வேண்டும். இது மிகவும் இயல்பு, அவரவர் துணையிடம் அனைவரும் இதை எதிர்பார்ப்பது தான் இது.

தாம்பத்தியம்
தாம்பத்தியம் என்பது இருவரும் இணைந்து ஈடுபட வேண்டிய ஒன்று. இதில் ஒருதலைப்பட்சமாக, செயல்படாமல், மென்மையாக உணர்வையும் மதித்து நடந்துக் கொள்ளும் நபராக இருக்க வேண்டும்.

வயிறு குலுங்க சிரி
நீங்கள் வெளியில் வேண்டுமானால் வால்டர் வெற்றிவேல் போன்று இருக்கலாம். ஆனால், வீட்டுக்குள் சிரிப்பு போலீஸாக தான் இருக்க வேண்டும். மனைவியை சந்தோசமாக வைத்துக் கொள்ள பணம் மட்டும் போதாது, நல்ல நகைச்சுவை மனமும் வேண்டும்.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com