25 வயதுக்குள் இவ்வளவு விசயங்களையும் அனுபத்துவிடல் வேண்டும். Share

நாமாவது ஐந்து வயதில் அல்லது பால்வாடி என்ற பெயரில் மூன்று வயதில் ஸ்கூலுக்கு சென்றோம். ஆனால், இப்போது டூட்லர் என்ற பெயரில் ஒரு வயது நிரம்பியவுடன் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிடுகின்றனர்.

பள்ளி வாசல் மிதித்துவிட்டால். டீனேஜ் முடியும் வரை படிப்பு.

டீனேஜ் முடிவிலேயே கல்லூரி, பலரும் கல்லாக ஊறித் தான் திரிகிறோம் அவ்விடத்தில். கல்லூரியை விட்டு வெளிவரும் முன்னர் கடைசி வருடத்திலேயே வேலை வாங்கவிட வேண்டும். இல்லையேல் தெருத்தெருவாக நாய் போல வேலை தேடி அலைய வேண்டும்.

இந்த அலைச்சல்களுக்கு மத்தியில் தங்கள் கடமை என்ற பெயரில் பெற்றோர் திருமணம் செய்துவிட்டால் உங்கள் வாழ்க்கை அதோகதிதான். வாழ்க்கை என்பது வாழ்கிறோம் என்பதை தாண்டி, எதற்காக வாழ்கிறோம் என்று ஒன்றிருக்கிறது. சில அனுபவங்களை அனுபவிக்க வேண்டும்.

அந்த வகையில் 25 வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 20 விஷயங்கள் என்னென்ன என்று இனிக் காண்போம்…

அனுபவம் #1
ஒருநாளாவது டேட்டிங் சென்று வந்துவிட வேண்டும். குறைந்த பட்சம் உணவருந்திவிட்டு வருமளவாவது.

அனுபவம் #2
முன்பின் அனுபவமில்லாத வெளியூருக்கு சென்று முகவரி தெரியாமல் தவிப்பது போன்ற ஓர் பயணம்.

அனுபவம் #3
ஸ்மார்ட் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு ஓர் நாளாவது வாழ வேண்டும்.

அனுபவம் #4
நண்பர்களின்றி தனியாக ஒரு பயணம். கலகலப்பு இருக்காது எனிலும், சுவாரஸ்யம் நிறைந்த பயணமாக அமையும்.

அனுபவம் #5
உங்களை எப்போது பார்த்தலும் கலாய்த்து கடுப்படிக்கும் அந்த நபருக்கு ஒரு நாளாவது மூக்கை அறுக்கும் வண்ணம் பதிலளிக்க வேண்டும்.

அனுபவம் #6
வேலையில் ஒருமுறையாவது ரிஸ்க் எடுத்து ஏதாவது முயற்சி செய்ய வேண்டும்

அனுபவம் #7
வீட்டை விட்டு பிரிந்து தனியான ஓர் வாழ்க்கை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும்.

அனுபவம் #8
உங்கள் வருமானத்தை நீங்களே கணக்கிட்டு, வரவு செலவு பார்த்து பொறுப்பாக இருக்க வேண்டும்.

அனுபவம் #9
உங்களுக்கு பிடித்த ஒரு பொருளை விலை உயர்ந்ததாக இருப்பினும், வாங்கிவிட வேண்டும்.

அனுபவம் #10
வெளி மாநிலமோ, வெளி மாவட்டமோ, வெளிநாடோ நண்பர்களுடன் ஓர் உல்லாச பயணம் சென்று வந்தவிட வேண்டும்.

அனுபவம் #11
சிறு வயதில் பெற்றோருடன் வருடா வருடம் பிக்னிக் சென்று வந்திருப்போம். ஆனால், இந்த வயதில் அவர்களுடன் எங்காவது சென்று அவர்களை மகிழ்வித்து கூட்டிவர வேண்டும்.

அனுபவம் #12
ஃபேஷன் என்ற பெயரில் ஊரே நம்மை பார்க்கும் வண்ணம் ஏதேனும் ஒரு கிறுக்குத்தனமான செயலை செய்ய வேண்டும்.

அனுபவம் #13
உண்மையாக, நேர்மையாக ஒருவரை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு நேசிக்க வேண்டும்.

அனுபவம் #14
உங்களை போன்ற அதே நம்பிக்கை, இலட்சியங்கள் கொண்ட ஒரு நபருடனான விரிவான, நீண்ட சந்திப்பு.

அனுபவம் #15
உடல் நலத்தின் மீது அக்கறை, உடற்திறன் அதிகப்படுத்துவது. உடலை ஆரோக்கியத்துடன் பாதுகாப்பது போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.

அனுபவம் #16
இந்த வயதிலாவது சமையல் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் திருமணதிற்கு பிறகு துணையை அசத்த முடியும்.

அனுபவம் #17
நட்சத்திரங்களுக்கு கீழான ஓர் இரவை அனுபவிக்க வேண்டும். கருநீல வானம், ஆங்காகே வைரமென மின்னும் நட்சத்திரங்கள். உடன் உங்களுக்கு பிடித்த நபர்கள். இதைவிட ரம்மியமான நிகழ்வு உங்கள் வாழ்க்கையில் பார்த்துவிட முடியாது.

அனுபவம் #18
புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். இது வாழ்க்கையில் நீங்கள் பல சூழல் மற்றும் தடைகளை தகர்த்தி முன்னேற வழிவகுக்கும்.

அனுபவம் #19
இல்லை என்று கூறி பழகுங்கள். உங்களை உபயோகிப்படுத்திக் கொள்ள மட்டும் முயலும் மக்கள் மத்தியில் இருந்து விலகியே இருங்கள்.

அனுபவம் #20
முடிந்த வரை 25 வயதில் இருந்தாவது சேமிப்பை துவங்க வேண்டும். இல்லையேல் எதிர்காலம், புதிர் காலம் ஆகிவிடும்.

அனுபவம் #21
ஓய்வு! ஒருவாரம் எங்கும் வீட்டைவிட்டு வெளியே செல்லாமல். பகல் பொழுதிலும் குட்டி, குட்டி தூக்கம் போட்டு ஜமாய்க்கும் படியான ஓய்வு எடுக்க வேண்டும்.

அனுபவம் #22
எப்போதோ சின்ன சண்டை காரணமாக கோபித்துக் கொண்டு பிரிந்த நட்பு, உறவை மீண்டும் போய்சந்தியுங்கள். உறவை புதுப்பித்துக் கொள்ளுங்கள். பணத்தை விட நல்ல உறவுகள் தான் ஓர் மனிதனுக்கு அத்தியாவசியமானது.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com