Loading...

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மேலும் நுாறு ரூபா கொடுக்கப்படவுள்ளது Share

இலங்கை பாடசாலை சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை மேலும் 100 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



இதன் பிரகாரம் 400 ரூபாவாக இருந்த சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை 500 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை சீருடை வழங்குவதில் நிலவிய திருட்டு மற்றும் மோசடிகளை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீருடைக்கான பற்றுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து கோடிக்கணக்கான ரூபா பணம் மீதப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இதன்மூலம் பற்றச்சீட்டின் பெறுமதி அதிகரிப்பதற்கு முடிந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இவற்றை இலகுவில் உரிய காலத்திற்குள் விநியோகிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com