நடிகர் பாலுஆனந்த் மாரடைப்பால் மரணம் Share

கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையத்தை சேர்ந்தவர் இயக்குனரும் நடிகருமான பாலு ஆனந்த் (வயது 62). இவரது மனைவி உமாமகேஷ்வரி. இவர்களுக்கு ஸ்ரீசரவணன் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர் கடந்த சில வருடங்களாக பாலு ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

 இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் திடீரென சேரில் அமர்ந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு பாலு ஆனந்த் இறந்து விட்டார்.


மரணம் அடைந்த பாலு ஆனந்த் இயக்குனர் ஆர்.சுந்தரராஜனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். அதன் பின்னர் நானே ராஜா, நானே மந்திரி, ரசிகன் ஒரு ரசிகை, அண்ணாநகர் முதல் தெரு, உனக்காக பிறந்தேன். சிந்து பாத் உள்பட 12 படங்களை இயக்கினார்.


மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மரணம் அடைந்த பாலு ஆனந்த் உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இவரது உடல் இன்று மாலை 3 மணியளவில் வீரகேரளத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com