ஈழத்து வாலிபருக்கு கனடாவில் நடந்த பயங்கரம்! என்ன நடந்தது ? யார் காரணம் ? Share

கனடாவில் இலங்கையர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று காலை டொரன்டோ பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சீ.பி.சீ செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது.கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கனேடிய குடியுரிமையை பெற்ற குறித்த இலங்கையர் தமது இரவு நேர முறைமாற்றல் தொழிலை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் தம்மை, இலங்கையரா? என வினவியதுடன் இலங்கைக்கு திரும்பிச் செல்லுமாறு அச்சுறுத்தியதாகவுதம் தாக்குதலுக்குள்ளான இலங்கையர் குறிப்பிட்டுள்ளார்.

20 வயது மதிக்கதக்க சுரேஸ் ஒம்மி என்ற இந்த இலங்கையர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், உலகின் பாதுகாப்பான நாடுகளில் கனடாவும் ஒன்று என நம்பியிருந்த தமக்கு இந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளான இலங்கை இளைஞர் தெரிவித்துள்ளார்.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com