யாழ் திருநெல்வேலியைச் சேர்ந்த 15 வயதான கம்சிகன் சுவிஸ்லாந் ஆற்றில் மூழ்கிப் பலி Share

யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சோ்ந்த சிவராஜ் கம்சிகன் எனும் 15 வயதுச்சிறுவன் சுவிஸ் போ்ண் மாநிலத்திலுள்ள ஆற்றில் மூழ்கி பாிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.

சுவிஸில் தந்தையுடன் சுமாா் இரண்டு வருடங்களாக வசித்துவரும் இச்சிறுவன் கடந்த திங்கட்கிழமை ( 27) சுவிஸ் வோ்ண் மாநிலத்தில் புதிய நீா் மின்னுற்பத்தி நிலையத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் மாலை வேளை நண்பா்களுடன் நீராடச்சென்ற போதே இத்துயரச்சம்பவம் நிகழ்துள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டதைத்தொடா்ந்து ஹெலிஹாப்டர், போலீஸ், தீயணைப்பு படை மற்றும் மருத்துவப்பிரிவு, ஜானியார்கள் என 50 பேர் கொண்ட குழு கடுமையான தேடுதலை மேற்கொண்டபோது. இரவு 9 மணியளவில் உடல் மீட்கப்பட்ட்துள்ளது.

நல்லடக்கம் எதிா்வரும் செவ்வாய்க்கிழமை சுவிஸ் வேர்ண் மாநிலம் வுறுக்டோா்வ் இல் இடம்பெறும் என உறவினா்கள் தெரிவித்தனா்.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com