சிங்கம் 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் Share

சூர்யா நடிக்கும் சிங்கம் 3 படத்தில் ஸ்ருது ஹாசன் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சூர்யா நடிப்பில் உருவான சிங்கம் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பினை பெற்றதுடன் வசூலையும் வாரிக்குவித்தது. அதன் தொடர்ச்சியாக சிங்கம்-2 படமும் வெற்றி பெற்றது. எனவே, சிங்கம் 3 படம் இப்போது முழுவீச்சில் தயாராகி வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஹரி இயக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.

எஸ் 3 என அழைக்கப்படும் இப்படத்தில் ஸ்ருதிஹாசனின் ரோல் குறித்த புதிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

‘ஸ்ருதி ஹாசன்’ பத்திரிகையாளராக நடிக்கிறார். ஸ்ருதி சம்பந்தப்பட்ட காட்சிகள் இந்த மாத இறுதி வரை படமாக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com