முல்லைத்தீவு மல்லாவியைச் சேர்ந்த திருவருள்குமார் அவுஸ்ரேலியாவில் சடலமாக மீட்பு (photo) Share

மெல்போர்ண் டன்டினொங் பகுதியில் ஈழத்தமிழ் அகதி ஒருவர் பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.


வன்னி மாவட்டம் மல்லாவியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய திருநாவுக்கரசு திருவருள்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவுச்சாப்பாட்டை முடித்த பின்னரர் நித்திரைக்குச் சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். அவர் உறங்கிய கட்டிலில் இரத்த கறை காணப்பட்டதுடன் சிறுநீர் கழிக்கப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் ஜந்து வருடங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்த அவர், குடும்பத்துடன் இணைய முடியாத நிலையில் தனது குழந்தை ஒன்றை அண்மையில் இழந்திருந்தார். இவ்வாறான நிலை மிகவும் மனம் குழம்பிய நிலையில் காணப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு தற்காலிக விசாவை வழங்கி வரும் அரசு அவர்கள் குடும்பங்களுடன் இணைவதற்கான அனுமதியை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com