லண்டனில் கவிப்பிரியாவின் இரு குழந்தைகளுடன் சேர்ந்து காரைக் கடத்திய கொள்ளையர்கள் (photos) Share

லண்டனில் வசித்து வரும் கவிப்பிரியா பாலசுதன் என்ற பெண் தன் மூத்த பிள்ளையை பாடசாலையில் இருந்து அழைத்து வருவதற்காக மற்றைய இரண்டு பிள்ளைகளையும் காரில் விட்டு விட்டு பாடசாலைக்கு சென்றுள்ளார்.இந்நிலையில் திடீரென கார் திருடன் ஒருவன் இரண்டு பிள்ளைகளும் காரில் இருக்கும் போதே குறித்த காரை திருடிச் சென்றுள்ளான்.

காரினுள் 8 வயது பெண் பிள்ளை மற்றும் 5 வயது மகன் இருந்ததாக தாய் கவிப்பிரியா பாலசுதன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சனிக்கிழமை இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கார் திடீரென எடுத்துச் சென்ற சத்தத்தை உணர்ந்த குறித்த தாய் தன் கையடக்க தொலைபேசியையும் காரில் தவறி விட்டு வந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கவிப்பிரியா தெரிவிக்கையில், என்னால் அதை நம்ப முடியவில்லை, எனக்கு என்னுடைய பிள்ளைகள் மாத்திரமே வேண்டும். இது தான் என்னுடைய முக்கிய எண்ணம் என்று தெரிவித்துள்ளார்.

என் பிள்ளைகள் இல்லாவிட்டால் நான் என்ன பண்ணுவேன் என எனக்கே தெரியாதென குறித்த தாய் தெரிவித்துள்ளார். இது எவ்வாறு திடீரென நிகழ்ந்தது என தனக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு என் காரை பற்றி எந்த அக்கறையும் இல்லை, எனக்கு என் குழந்தை மட்டுமே வேண்டும் என கூறியுள்ளார். பின் பொலிஸார் குறித்த வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரிடம் அந்த சமயத்தில் விசாரணைகள் இடம் பெற்று வந்ததாகவும் பின் நிரூபிக்கப்பட்ட பிறகு 19 வயதுடைய சந்தேக நபரை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவும் ஒரு தகவல்

கடந்த 17ம் திகதி அன்று லண்டன் இல்பேட்டில் வைத்து அவுடி Q7 சொகுசுக் காரில் இருந்த 2 தமிழ் சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள். காரை ஓட்டிச் சென்ற கவிப்பிரியா, தனது காரை ஓரமாக நிறுத்திவிட்டு (20 மீட்டர் தூரத்திற்குச் சென்று) தனது மூன்றாவது பிள்ளைய டிசூசன் மாஸ்டரிடம் இருந்து எடுக்கச் சென்றுள்ளார்.


இதேவேளை நிறுத்தி இருந்த அவுடி காரின் பின் இருக்கையில் அவரது 2 பிள்ளைகளும் இருந்துள்ளார்கள். நொடிப் பொழுதில், கார் கதவை திறந்துகொண்டு உள்ளே ஏறிய இருவர் காரை ஓட்டிச் சென்றுவிட்டார்கள். பின் இருக்கையில் இருந்த பிள்ளைகள் கூச்சலிட்டும் அவர்கள் காரை நிறுத்தவில்லை. இரண்டு பிள்ளைகளையும் காரோடு தொலைத்த கவிப்பிரியா என்னசெய்வது என்று தெரியாமல் கதறி அழுதார். உதவிக்கு வந்த பொலிசார் வாகனத்தை எவ்வாறு , கண்டுபிடிப்பது என்று யோசித்தவேளை தான். தனது ஐ-போன் வாகனத்தில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.


மெற்றோ பொலிடன் பொலிசார் உடனடியாக செயல்பட்டு, கவிப்பிரியாவின் ஐ-போனை தொலைந்தால் தேடும் மென்பொருள் உதவியோடு தேடியுள்ளார்கள். சுமார் 10 மைல் தொலைவில் கார் அவரது போன் இருப்பதாக மற்றைய ஐ-போன் காட்டியுள்ளது. இதனை வைத்து உடனடியாக பொலிசார் அவ்விடத்திற்குச் சென்றுள்ளார்கள். அங்கே உள்ள பார்க் ஒன்றில் கார் தரித்து நின்றுள்ளது.

அதில் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பதை பார்த்த பின்னர் தான் தனக்கு மூச்சே வந்து என்று விவரித்துள்ளார் கவிப்பிரியா. எம்மில் பலர் கிட்ட இடம் தானே செல்கிறோம் என்று நினைத்து காரை ஸ்டாட்டில் விட்டு செல்வது வழக்கம். ஆனால் இது எப்படியான ஆபத்தை கொண்டுவந்துள்ளது என்று பார்த்தீர்களா ?


அவுடி காரை திருடியவர்கள் அங்கே இருந்த எந்த விலையுயர்ந்த பொருட்களையும் எடுக்கவே இல்லை. அவர்கள் காரை திருடி ஓட்டிப் பார்த்துவிட்டு அப்படியே விட்டுச் சென்றுள்ளார்கள் என்று நம்பப்படுகிறது. வானத்தை நிறுத்தாமல் , விட்டுச் சென்று. வாகனம் களவுபோனால் , இன்சூரன்ஸ் கம்பெனி அதற்கு பொறுப்பு கூறத்தேவை இல்லை என்பதனையும் நீங்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com