தமிழ் சினிமாவில் பிண்ணணி பாடகியாக அறிமுகமாகும் கனடிய ஈழதமிழ் பாடகி….. Share

பிரபல இசையமைப்பாளர் டி.இமான் அவர்கள் தமிழ் திரையுலகில் பிண்ணணி பாடகியாக அறிமுகமாகும் கனடாவை சேர்ந்த ஈழதமிழ் பெண்ணான லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் அவர்களுக்கு வாய்பளித்துள்ளார்,

அண்மையில் கனடாவில் நடந்த கலைநிகழ்சிகளில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்வுக்கு பிறகு டி,இமான் இசைநிகழ்வுக்கே மக்கள் பெரும் ஆதரவு அளித்தது மக்கள் அறிந்ததே..

கனடா வந்த டி.இமான் அவர்கள் தமது இசைநிகழ்சியில் கனேடிய கலைஞர்களுடன் இணைந்து மேடையில் பாடியும் ஈழதமிழ் மக்கள் மீது வைத்துள்ள அன்பை வெளிக்காட்டி இருந்தார்

இங்கு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பத்திரிக்கையாளர் ஒருவர் ஈழத்துகலைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பீர்களா என கேள்வி எழுப்பினார்.. திறமயானவர்களுக்கு தாம் கண்டிப்பாக வாய்ப்பு தருவதாக உறுதியளித்தார்

அதன் வெளிப்பாடாக தற்போது டி.இமான் அவர்கள் கனடாவில் வாழும் இலங்கை தமிழ் பெண்ணான லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் அவர்கள். . ஜெயம்ரவி , ஹன்சிக்கா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள போகன் திரைப்படத்தில் பாட வாய்ப்பளித்து பிண்ணனி பாடகியாக அறிமுகபடுத்தியுள்ளார்.

குரல் பதிவிற்காக சென்னை சென்றிருந்த லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் 24ம் தேதி குரல் பதிவினை முடித்து இன்று டொரான்டோ வந்தடைந்தார் … டி.இமான் அவர்களின் இசையில் பாடியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். ..

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்ளாறும் ஈழதமிழ் மக்களின் மீது ஒப்பற்ற அன்பு கொண்ட டி.இமான் தாம் இசையமைத்த சாட்டை திரைப்படத்தில் கனடாவில் வாழும் ஈழதமிழ் பெண்ணான எலிசபெத் மாலினிக்கு முன்பு வாய்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com