Loading...

3 வயது ஆண் குழந்தையை வல்லுறவுக்குள்ளாக்கிய காமுகி இவள் Share

இளம்பெண் ஒருவர் 3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை தந்து அதை புகைப்படம் எடுத்து தனது நண்பருக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


லண்டனை சேர்ந்தவர் சாடீ மோரீஸ் (24). இவர் கடந்த 2013 ஜூலை மாதம் மூன்று வயது குழந்தையுடன் நிர்வாணமாக பாலியலில் ஈடுபட்டிருந்துள்ளார். பின்னர், அதை தனது பிளாக்பெரி போன் மூலம் புகைப்படம் எடுத்து ஆண் நண்பர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார்.

அந்த புகைப்படம் பெறப்பட்ட நபரின் கைப்பேசியை கைப்பற்றி பொலிசார் சோதனை செய்துள்ளனர். பின்னர், புகைப்படம் குறித்து மோரீஸை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மோரீஸ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். அவரின் புகார் பற்றி நீதிபதி நிக்கோலஸ் கூறுகையில், 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் பாலியல் கொடுமையில் ஈடுபடுவது என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். அவருக்கு எதிராக நிறைய ஆதாரங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

நீதிபதி முன்னிலையில் பேசிய மோரீஸ், என் வித்தியாசமான புகைப்படத்தை பலர் கேட்டதாகவும், அதற்காக சில ஆராய்ச்சிக்காக சில படங்களை எடுத்ததாகவும் என் கைபேசியை வேறு யாரோ உபயோகபடுத்தி அந்த புகைப்படங்களை அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.

குழந்தைகள் தொண்டு நிறுவனமான NSPCC கூறுகையில், மோரீஸ் நடந்து கொண்ட விதம் மிக தவறானது, அவர் நிச்சயம் தண்டிக்க பட வேண்டியவர் என்று கூறியுள்ளது.

இதனிடையில் அவருக்கு 5 வருட சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com