மனைவி அமைவதெல்லாம் அவளின் பெற்றோர்கள் வளர்த்த விதம் Share

அம்மா ஞாபகம் வந்துவிட்டது அதனால் அவசரமாக ஊருக்கு போகிறேன்... என் Phone la balance இல்லை அதான் இப்படி சொல்றேன்...


நாளை ஞாயிற்றுக்கிழமை என்று 10மணீ வரை தூங்காதீர்கள். தூங்கும் முன் டிவியை ஆப் செய்யுங்கள், தூங்கி எழுந்த உடனே வாசக் கதவில் பால் பாக்கெட் இருக்கும் உடனே எடுத்து Frightல் போடுங்க இல்லைனா பால் கெட்டுப் பொய்டும்... இரவு தூங்க செல்லும் முன் எல்லா கதவையும் ஒரு பார்வை பார்த்துக்கொள்ளுங்கள். வெளியில் டாமி (நாய் குட்டி) கட்டிப் போட்டிருக்கிறேன். காலையில் எழுந்தவுடன் தண்ணீரும் பிஸ்கட்டும் அதற்கு வையுங்கள் பாவம்ல, நான் வீட்டில் இருக்கிறேன் என்று Bathrom கதவை தாழ்ப்பாள் போட மறந்துவிடாதீர்கள். Bathroom உள்ளே Cell Phone கொண்டு போவாதிங்க அந்த பழக்கத்தை முதல விடுங்க Bathroom உள்ளே குளிக்க செல்லும் முன் துண்டை எடுத்து செல்ல மறவாதீர்கள்.


Fridgeல் இன்றைய பால் வைத்திருக்கிறேன். நாளை காலையில் அதை எடுத்து... காபி தூள், சீனீ, டப்பா எல்லாம் அடுப்பிற்கும் பக்கத்திலே இருக்கிறது. டீ உங்களுக்கு ஆகாது! ஆதலால் காபி போட்டு குடியுங்கள், சொன்னா கேட்கனும் சரியா??? அப்புறம் மாவு Fright உள்ள இருக்கு... மூன்று கரண்டி கல்லில் ஊற்றி தோசை சுட்டு காலை உணவு கட்டாயம் சாப்பிடுங்கள், எனக்காக நாலு தோசை மட்டும் சாப்பிடுங்க போதும். மதியம் மட்டும் ஒரு நல்ல ஹோட்டலில் சைவ சாப்பாடு சாப்பிடுங்க புரியுதா! சைவம் மட்டும் சாப்பிடுங்க அசைவம் நான் வந்து செய்து தருகிறேன்... மாலை நேரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்று Bykல் ஊர் சுற்ற வேண்டாம். வேண்டும் என்றால் நடந்து கடைத் தெருக்களுக்கு செல்லுங்கள்!
அப்புறம் ஹான்!!! கையேந்தி பவன். ரோட்டுக் கடை சாம்பார் வடை, டீ, பாஸ்ட் பூட், பாணிப் பூரி... இவையெல்லாம் தயவுசெய்து வெளியில் சாப்டாதிங்க! சாப்பிடனும் போல இருந்தால் நான் வந்து செய்து தருகிறேன். சரியா!!! அப்புறம் ஏனுங்க சொல்ல மறந்துட்டேன்! நான் சொன்னா கேளுங்க! தயவுசெய்து சிகரெட் பிடிக்காதிங்க இருமல் வரும்.டா... அப்படி கட்டாயம் சிகரெட் பிடிக்க போனும் னா வீட்டு பால்கணிலயே நின்று குடிங்க ஒன்னு போதும் இல்லைனா! இரண்டு மட்டும் குடிங்க... அப்புறம் ஹான்!!! வெளியில் சென்றால் இரவு 10 மணிக்குள் வீட்டிற்குள் சென்றுவிடவேண்டும் சரியா!!!
அப்புறம், அப்புறம், சரி நேரமாச்சு!!! இன்னும் ஏதாவது சந்தேகம் அவசரம் என்றால் உடனே எனக்கு Call பன்னுங்க! காலையில் நீங்க எழுந்திரிக்கும் முன்னால் வீட்டிற்கு வந்துவிடுவேன். Miss U Da...உம்ம்...
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதை விட...
மனைவி அமைவதெல்லாம் அவளின் பெற்றோர்கள் வளர்த்த விதம் என்றுதான் சொல்லவேண்டும்.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com