நாளை யாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்... இது நாறல் வாய்... (Video, Photo) Share

யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட்டு அடிமைகளைப் போல் கொண்டு வருவதற்கு இந்திய உளவுத்துறை கங்கணம் கட்டிச் செயற்பட்டு வருகின்றது. அதற்காக எத்தனையே விளையாட்டுக்களை யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றி வருகின்றது.யாழ்ப்பாணத் தமிழர்களின் மூளைகளுக்குள் விதைக்கபட்டுள்ள கல்வி அறிவு, கற்புரபுத்தி, தமிழ்தேசிய உணர்வு ஆகியவை அடங்கிய அந்த மூளை தற்போது நோய் பிடித்துள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. அதற்கான மருந்தை இந்தியா ஒரு போதும் வழக்க மாட்டாது. ஆனால் அந்த மூளைக்குள் உள்ளதை வறுகி எடுத்தெறிந்து விட்டு தமிழ்நாட்டு மக்களை ஆட்டிப்படைக்கும் சினிமாக் கூத்தாடிகளின் மோகத்தை மூளைக்குள் புகுத்துவதற்கு மும்முரமாக உள்ளது.

இதற்காக நாளை யாழ்ப்பாண மாநகரசபை மைதானத்தில் நாற்று மேடை அமைக்கப்பட்டு விளக்கை நோக்கி வரும் விட்டில் புச்சிகள் போல் வரும்  யாழ்ப்பாணத் தமிழர்களின் மூளைக்குள் சினிமா மோக நாற்று நடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக குறித்த நடவடிக்கைக் குழு 25 மில்லியன் ரூபாக்களைச் செலவு செய்துள்ளதாம்.

அத்தோடு பத்தாயிரத்திற்கும் அதிகமான மூளை சுகமி்ல்லாத யாழ்பபாணத் தமிழர்கள் அங்கு வரவுள்ளார்கள் என்றும் எதிர்பார்க்கின்றார்களாம்.

இந்த நாற்றை நடுவதற்காக 35 பேர் இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்துள்ளார்கள். இவர்களில் 7 பாடகர்களும் 28 பக்கவாத்தியக்காரர்களும் அடக்கம். ஐங்கரன் மீடியா என்ற ஒன்றை நடாத்திவரும் என்.கார்த்திக் என்ற மலையகத்தமிழனே. இந்த விழாவுக்கான ஏற்பாட்டாளர் ரஜீவன் ஆவான். இவரும் யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் நடராஜாவும் நெருங்கிய நண்பர்கள் எனத் தெரியவருகின்றது. தற்போது இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த குறித்த சினிமாக்கூத்தாடிகள்  நல்லுார் பகுதியில் அமைந்துள்ள ஜெற்வின்னர் ஹோட்டலில் தங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

விடுதலைப்புலிகளின் காலத்தில் புரட்சிப் பாடல்களைப் பாடி பெருமை சேர்த்த குறித்த கூத்தாடிகள் தற்போது காசுக்காக கூத்தாடிப் பாடவுள்ளனர்.

வடிவேலு சொன்னது போல்.... அது வேற வாய்... இது நாறல் வாய்....

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com