நாகர்கோவிலில் அனுஸ்காவை 3 இளைஞர்கள் சேர்ந்து வல்லுறவுக்குட்படுத்தியதால் பதற்றம் Share

கூடா நட்பு கேடாய் முடிந்துள்ளது. காதலனை நம்பிச் சென்ற மாணவியிடம் அவனது நண்பர்கள் எல்லை மீறி இருக்கிறார்கள். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட காதலன் நண்பர்களுடன் தற்போது கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்.



இளம்பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இளைய சமுதாயம் சீரழிந்து கொண்டு இருப்பதை நடக்கும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுன்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் தக்கலையைச் சேர்ந்தவர் அனுஷ்கா (பெயர் மாற்றம்). 19 வயதாகும் இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறார். இவர், கடந்த 13-ம் தேதியில் வெளியே சென்றவர், பின்னர் விடுதி திரும்பவில்லை. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம், அனுஷ்காவின் தந்தை ஜெய்சிங்குக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் தக்கலை காவல் நிலையத்தில் ஜெய்சிங் புகார் கொடுத்தார். அதன்பேரில் அனுஷ்காவை போலீஸார் தேடினர்.

இந்நிலையில் அனுஷ்கா, அங்குள்ள ஒரு லாட்ஜில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து அங்கு சென்ற போலீஸார் அனுஷ்காவை மீட்டனர். பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

வடசேரியைச் சேர்ந்த சுரேஷ் என்ற பிரஜித் டிரைவராக உள்ளார். விடுதியிலிருந்து வெளியே செல்லும் அனுஷ்கா, பிரஜித்தின் வேனில் செல்வதுண்டு. இதனால், இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. பிறகு இருவரும் பல இடங்களுக்கு சென்றுள்ளனர். அப்போது, அனுஷ்காவை திருமணம் செய்து கொள்வதாக கூறி பிரஜித் எல்லை மீறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் வெளியே சென்று, வடசேரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் கணவன், மனைவி என்று அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது லாட்ஜ் ஊழியர்கள் காதல் ஜோடிக்கு அறை கொடுக்க மறுத்துள்ளனர். அப்போது விருப்பு ஓய்வுபெற்ற போலீஸ்காரர் கோபால், அறை கொடுக்குமாறு சிபாரிசு செய்துள்ளார். இதன்பிறகு அறை கொடுக்கப்பட்டுள்ளது.

அங்கு தங்கியபோது அனுஷ்காவை, பிரஜித்தின் நண்பர்கள் போலீஸ்காரர் கோபால், தினேஷ், ஞானபிரவின் ஆகியோரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் போலீசில் தெரிவித்துள்ளார். அதன்பேரில் பிரஜித் மற்றும் அவரது நண்பர்கள் கோபால், தினேஷ், ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஞானபிரவின் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். மாணவி மாயம் என்ற புகார், தக்கலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருப்பதால் அடுத்தக்கட்ட விசாரணைக்காக வடசேரி காவல் நிலையத்திலிருந்து தக்கலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "சம்பவத்தன்று அனுஷ்கா மற்றும் அவரது கல்லூரி நண்பர்கள் சேர்ந்து மது அருந்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. போதை தலைக்கேறியதும் அனுஷ்காவிடம் அவர்கள் எல்லை மீறியுள்ளனர். இவர்களுக்கு உறுதுணையாக இருந்த போலீஸ்காரரையும் கைது செய்துள்ளோம்" என்றார்.

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "மாணவியின் எதிர்காலம் நலன்கருதி அவரது பெயர் மற்றும் குடும்ப விவரங்களை வெளியிடவில்லை. இருப்பினும் மாணவி தரப்பிலும் தவறு இருக்கிறது. மாணவி, பொது இடத்தில் மது விருந்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போதுதான் இந்த விபரீதம் நடந்துள்ளது. மாணவியும், பிரஜித்தும் அறை எடுத்துத் தங்கியபோது வேறு யாரும் இல்லை. இதன்பிறகே மற்றவர்கள் அங்கு சென்றுள்ளனர். இதனால் பிரஜித், திட்டமிட்டே மாணவியை அங்கு அழைத்துச் சென்றுள்ளார். பிரஜித், அவரது நண்பர்கள் இதுபோல வேறு எதுவும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்றும் விசாரணை நடக்கிறது.

கோபால், கடந்த 93-ம் ஆண்டு போலீஸ் வேலைக்கு சேர்ந்துள்ளார். குடிபழக்கமும், இரண்டு மனைவிகள் தகராறு காரணமாக அவர் வேலையிலிருந்து விருப்ப ஓய்வில் சென்றதாக கூறப்படுகிறது. அவரது ஐடி கார்டை பயன்படுத்தித்தான் அறை எடுத்ததாக தெரியவந்துள்ளது. அவரும், பிரஜித்தின் நண்பர். இவர்கள் எல்லோரும் கூட்டாக சேர்ந்து அனுஷ்காவிடம் எல்லைமீறியுள்ளனர். மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளது" என்றனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com