யாழில் ஆட்டோ ஓட்டும் நாம்பன் மாட்டின் அட்டகாசம்!! வேலி பாயும் பசுமாடுகளால் உரிமையாளர்கள் திண்டாட்டம்!! Share

யாழ் உரும்பிராய் பகுதியில் ஆட்டோச் சொந்தக்காரனான ஒருவனால் அவனது அயல் பகுதிகளில் உள்ள கலியாணம் கட்டிய குடும்பஸ்தர்கள்

யாழ் உரும்பிராய் பகுதியில் ஆட்டோச் சொந்தக்காரனான ஒருவனால் அவனது அயல் பகுதிகளில் உள்ள கலியாணம் கட்டிய குடும்பஸ்தர்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். குறித்த ஆட்டோக்காரன் அப்பகுதிகளுக்கு அண்மையில் உள்ள பெண்களை தனது ஆட்டோவில் ஏற்றித் திரிவதுடன் நின்றுவிடுவதில்லை. அவர்களை தனக்கு பாலியல் அடிமைகளாக மாற்றி அவர்களின் நகைகளைக் கூட வங்கியில் அடைவு வைக்கும் அளவுக்கு கில்லாடியாக உள்ளதாகத் தெரியவருகின்றது.

இவனது ஆட்டோவில் இவ்வாறு ஏறிய பல குடும்பப் பெண்கள் தங்களையும் தங்கள் நகைகளையும் இழந்துள்ளனர். ஐய்யப்பன் பக்தனான குறித்த ஆட்டோக்காரன் கறுப்பு ஆடையுடனேயே திரிவது வழமை என்றும் சாமியார் போக்குப் போல் இவன் திரிவதால் இவனது கில்லாடி வேலைகளை அறியாத குடும்பஸ்தர்கள் தங்கள் மனைவிகளை இவனது ஆட்டோவில் ஏற்றி பல்வேறு இடங்களுக்கும் செல்ல அனுமதி அளித்துள்ளனர்.

அதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கோண்டாவில் பகுதியில் உள்ள பிரபல புள்ளி ஒருவரின் மனைவி உட்பட பலரை தனது வலைக்குள் வீழ்த்தி பெருமளவு நகைகளையும் பணத்தையும் குறித்த பெண்களிடம் பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் அப் பெண்களை தனது பாலியல் தேவைகளுக்கும் பயன்படுத்தியுள்ளான் ஆட்டோச்சாரதி.

ஆட்டோக்காரனின் லீலைகளை அறிந்த பிரபல புள்ளி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பொலிசில் மாட்ட நினைத்த போது தனது மனைவியின் திருவிளையாடல்களை குறித்த ஆட்டோக்காரன் பொலிசாருக்கு தெரியப்படுத்திவிடுவேன் என அச்சுறுத்தியதால் அடங்கிப் போய் உள்ளாராம். தனது திருவிளையாடல்கள் தெரியவந்துள்ளதால் ஆட்டோக்காரன் தற்போது அப்பகுதியில் இருந்து தலைமறைவாக உள்ளதாக தெரியவருகின்றது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com