Loading...

மாமியாரின் தொல்லை!! ‘எனக்கு பிள்ளை வரம் தா‘ என தனது நண்பனிடம் கேட்ட துர்க்கா!! Share

(பெயர்கள்..ஊர்கள் மாற்றப்பட்டுள்ளது.) அந்த கணவன் பெயர் ரகுவாசன். மனைவி துர்கா. திருமணம் ஆகி மூன்றே வருடங்கள். குழந்தை இல்லை.


ரகுவிற்கு கல்யாணத்திற்கு முன்பே குடிப்பழக்கம் உண்டு. அதுவும்  கணக்கு வழக்கு இல்லாமல் குடிப்பான்.

அவனின் அம்மா, அப்பா அண்ணன்,அண்ணி நால்வரும் ரகுவிற்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் திருந்தி விடுவான். இல்லையே சொத்தெல்லாம் குடித்தே அழித்துவிடுவான்  என்று பயந்தார்கள்.

அவசரமாக பெண் பார்த்தார்கள். தூரத்துச் சொந்தம் துர்கா மாட்டினாள். அதற்கு முன்பே காய்கறிக்கடை வைத்துக் கொடுத்து விட்டார்கள்.

கல்யாணத்திற்கு பின் குடிப்பதை நிறுத்திவிட்டான் ரகு. காய்கறிக்கடை வியாபாரத்தில் முழுக் கவனம் செலுத்தினான். கைநிறைய காசு பார்த்தான்.

ஆனால், இரவு நேரங்களில் மனைவியை நெருங்க தயக்கம் காட்டினான். …….

ஒருவருடம் வரை மாமியார் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அடுத்த வருடமும் குழந்தை இல்லை என்றதும் பிரச்னை செய்ய ஆரம்பித்தார்.

ஜாடைமாடையாக திட்டினார். இரண்டு வருடங்கள் கழித்தும் குழந்தை இல்லை என்றதும்  மலட்டுச் சிறுக்கி என்று காதுபடவே திட்ட ஆரம்பித்தார்.

அண்ணியும்  சேர்ந்து அசிங்கமாகப் பேசினார். துர்கா பொறுக்க மாட்டாமல் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு சென்று விட்டாள்.

ரகு போய் கூட்டி வந்தான். மீண்டும் டார்ச்சர். அது இரண்டு குடும்பங்களுக்குள் பெரிய சண்டையாக மாறியது.

அப்போதும் துர்கா ஆண்மையற்ற கணவனை காட்டிக் கொடுக்கவில்லை. மீண்டும் அம்மா ஊருக்குப் போய்விட்டாள். ஒரு நாள் தண்ணீர் எடுக்க கிணற்றுக்குப் போனாள்.

அங்கு அவனைப் பார்த்தாள். கதிரேசன். எட்டு வருடங்கள் ஒன்றாகப் படித்தவன்..மிக அற்புதமான பையன். ஒரு முறை தான் காதலிப்பதாக கூறினான்.

துர்கா பதில் சொல்ல தயங்கினாள். அதன் பின் அவன் மிலிடரி வேலைக்குப் போய் விட்டான். இப்போது பார்த்ததும் அவளுக்கு அழுகை வந்தது. அழுதாள். அவன் பதறினான். நீண்ட நேரம் பேசினார்கள்.

அதன் பின் கண்மாய்க்கரை தோப்புகளில் சந்தித்து மனம் விட்டுப் பேசினார்கள். ஒரு நாள் துர்கா கேட்டே விட்டாள். எனக்கு ஒரு குழந்தை வேணுண்டா..என்றாள்.

பதறிப் போய் விட்டான் கதிரேசன். அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை…! பார்க்கலாம் என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

இரண்டு நாட்கள் அவளை அவன் பார்க்கவில்லை..! மூன்றாம் நாள் அவளைப் பார்த்தான். இப்போதும் உன்னை நான் காதலிக்கிறேன்.

அதற்காக உன் கணவனுக்கு துரோகம் பண்ணாதே..! என் குழந்தைக்கு அவனை அப்பா ஆக்குவது பாவம்.

டைவர்ஸ் வேண்டுமானால் பண்ணி விட்டு வா..அடுத்த வாரமே உன்னை திருமணம் செய்கிறேன் என்றான்…!

துர்கா விவாகரத்திற்கு மனு செய்திருக்கிறாள்..!

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com