வவுனியாவில் நெடுங்கேணியில் காட்டுக்குள் மாணவியுடன் லீலை நடாத்திய நபர் பொலிசாரால் பிடிக்கப்பட்டார் Share

வவுனியாவில் இன்று முற்பகல் நெடுங்கேணி பாடசாலை ஒன்றில் க.பொ. த. சாதாரணப் பரீட்சை எழுதும் மாணவியை வவுனியாவிலிருந்து சென்ற நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயன்றபோது பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று முறியடித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று முற்பகல் வவுனியா வடக்கு நெடுங்கேணி, சிவாநகர் பகுதியிலுள்ள காட்டுப்பகுதி ஒன்றிற்கு குறித்த பாடசாலை மாணவியை வருமாறு சந்தேக நபர் அழைத்துள்ளார்.

இதனையடுத்து மாணவி தனது நண்பியுடன் துவிச்சக்கர வண்டியில் சென்று குறித்த இளைஞனுடன் காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளார்.

இதனை அப்பகுதியில் இருந்து அவதானித்த பெண் ஒருவர் உடனடியாக நெடுங்கேணி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் இருமாணவிகள் குறித்த இளைஞனையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com