Loading...

இந்த மாகாண சபையில் எல்லாம் நல்லபடியாக நடக்குது. Share

இந்த மாகாண சபையில் எல்லாம் நல்லபடியாக நடக்குது. ஆனால் இந்த கீதம், கொடி, சின்னம், மரம் என்பன சரியாக இல்லாதபடியால் தான் இந்த மூன்று வருடத்தில் எதையும் சரியாக செய்ய முடியவில்லை.

வடக்கின் அபிவிருத்தி தொடர்பிலும் அதன் தேவைகள் பல தொடர்பிலும் கதைப்பதை விட்டு விட்டு தேவையில்லா தீர்மானங்களும், தேவையற்ற கதைகளும் மலிந்த சந்தையாகி விட்டது போல் உள்ளது.
வடக்கின் நிர்வாகம் சார்ந்த அபிவிருத்தியின் ஒரு பாகத்தை தேவையென ஒன்றை சுட்டிக்காட்டுகின்றேன்.


அரச நிறுவனங்களின் பாவனைக்கென வெளியிடப்பட்ட படிவங்கள், புத்தகங்கள், வெளியீடுகள் என்பவற்றை அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் கொழும்பில் சென்று கொள்வனவு செய்கின்றோம். ஆனால் இவற்றுள் எத்தனை தமிழ் மொழிமூலம் கிடைக்கின்றன என்றால் கேள்விகுறிதான்.
அரசாங்க தாபனவிதிக் கோவை, நிதிப் பிரமாணம், சிவில் சட்ட கோவை, பெறுகை கைநூல், சட்டங்கள், சுற்றறிக்கைகள், வர்த்தமானி அறிவித்தல்கள், வழக்குத் தீர்ப்புக்கள் என்பனவற்றில் எத்தனை நூல்கள் தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடைக்கின்றன. ஏதோ எப்போது போனாலும் அரசியலமைப்பு சட்டம் மாத்திரம் தமிழில் பெறமுடியும்.அதை தவிர எவற்றையும் தமிழில் பெற முடியாது. இதைவிட படிவங்கள், பற்றுச்சீட்டுக்கள், ஆணைச்சீட்டுக்கள், கட்டளைகள், பேரேடுகள் புத்தகங்கள் என்பவற்றை கூட தமிழில் பெற முடியாதுள்ளது என்பதையும் தாண்டி தேவையான தொகையையும் பெற முடியாதுள்ளது.


இவற்றின் மூலம் நிர்வாக ரீதியில் பல சிரமங்களை இந்த மாகாண அரச ஊழியர்கள் எதிர்நோக்குகின்றனர்.


அண்மைய சம்பவமாக உள்ளூராட்சி மன்றங்களின் வகிபாகம் தொடர்பில் அதன் அதிகாரிகளுக்கு விளக்கிய போது அத உசாத்துணை நூல்களை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவ் நூல்களில் பலவற்றை உத்தியோகத்தர்கள் காசு கொடுத்து கூட பெறக் கூடிய வழியில்லாத நிலை இம் மாகாணத்தில் உள்ளது.


எனவே மாகாணத்திற்கென ஒரு அச்சக அலகை கூட நிர்வகிக்க சிந்திக்காத அரசியல் வாதிகள் மாகாண அலகில் வேறு என்ன அதிகாரத்தை எதிர்பார்க்கிறார்கள்.


சும்மா உழுத்துப்போன தீர்மானங்களையும் கொள்கைகளையும் கதைத்து இருக்கும் காலத்தை வீணடித்து விட்டு அடுத்த தேர்தலுக்கு நடக்க முடியாத வாக்குறுதிகளை வழங்கி அதற்கு காலக்கெடுக்களையும் வழங்கி உங்கள் பாட்டை ஓட்டுங்கள்.... அது போதும் உங்களை நம்பி வாக்களித்த ஏமாளிகளுக்கு
ஆடத்தெரியாதவனுக்கு மேடை கோணல்போல உங்களுக்கு #சின்னம் சரியல்ல" என்பதாய் போச்சு

No automatic alt text available.No automatic alt text available.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com