Loading...

உடல் உறவுக்கு ஆசைப்பட்ட மார்பகம் சிறிதான தமிழ் யுவதிக்கு நடந்த கதி!! Share

மார்பகங்கள் சிறிதான பெண் கலியாணமே கட்டக்கூடாதா??? அந்தக் காலத்திலேயே பெண் அடிமைத்தனம் இருந்ததா???

ஓ.எல் ரெஸ்ட் எடுத்து கொஞ்ச நாளில யாழ்ப்பாணம் ஆரியகுளத்துக்குப் பக்கதிதில இருக்கிற ரியுசனில பிறிட்டோ சேரிட்ட இங்கிலிசுக் கிளாசுக்குப் போனது ஞாபகம் இருக்குது...
அந்த கிளாஸ் நேரத்தில பக்கத்து வகுப்பில குழந்தை வாத்தி நல்ல வடிவா தமிழ் படிப்பிக்கும். அப்படி படிப்பிக்கும் போது அவர் பக்கத்து வகுப்பில சொன்ன திருக்குறள் இப்பவும் ஞாபகம் இருக்குது....

அந்தத் திருக்குறளும் அதுக்கு பல பேர் சொன்ன விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதையே நான் சொல்லியிருந்தால் அட கூறு கெட்டவனே!!! உங்களுக்கு ஒரு பொம்பிளையை வைச்சாடா உவமானம் செய்ய மனசு வந்தது... அவமானப்பட்டதுகளே... நீங்கள் எல்லாம் அக்கா தங்கச்சியோட பிறந்தனீங்களோ... என்று பேஸ்புக்கில குமுறத் தொடங்கி விடுவாங்கள்...

இதையே திருவள்ளுவர் சொன்னால் அதை தமிழ்வாத்தி நல்ல வடிவா பொருள் விளக்கத்தோட ரசனையோட சொல்லுவார் ....

அதுவும் தமிழருவி சிவகுமார் இன்னும் ரசனையா சொல்லுவார்....

தமிழருவி சிவகுமாரிட பேச்சை 1994, 1995 தொடக்கங்களில கேட்டு காமவயப்பட்ட இளைஞர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அதில நானும் ஒருவன்தான்...

ஒரு இளவரசிட இடை பற்றி சிவகுமார் ஒருக்கா தின்னவேலி சிவன்கோவிலில் கூறிய வர்ணனை இப்பவும் ஞாபகத்துக்கு இருக்கு...

ஒரு தேனி அந்த இளவரிட இடையை இரு மலர்களைத் தாங்குகின்ற சிறு மெல்லிய கொடி என்று நினைச்சதாம். அது உடன அந்த கொடியை நோக்கிப் பறந்த போது அந்த தேனிட இறக்கையின் காற்றுக்குக் கூட தாக்குப் பிடிக்காமல் அந்த இடை ஆடியதாம்....

இது பற்றி தமிழருவி சிவகுமார் திருநெல்வேலி சிவன் கோவிலில் அரை மணித்தியால விளக்கம் கொடுத்திருந்தார். அதைக் கேட்டு அந்த சிவன் அன்றைக்கு இரவு அம்மனைப் போட்டு என்ன பாடுபடுத்தினாரோ!!!!!

இப்புடி இதை எழுதினதை சிவகுமார் கேள்விப்பட்டால் ‘அட பன்னாடை‘ எத்தனையோ நல்ல விசயங்களை சொல்லியிருக்கிறன்... இவன் இதைப் பொறுக்கி வைச்சிருக்கிறானே!! என்றுதான் ஏசுவார் என்பதும் எனக்குத் தெரியும்.....

சரி திருக்குறளை ஒரு தடவை வாசித்துப் பாருங்கள்....

 
குறள் 402:

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.

மணக்குடவர் உரை:
கல்வியில்லாதான் சொல்லுதற்கு ஆசைப்படுதல், இரண்டு முலையுமில்லாதாள் பெண்மைக்குக் காமுற்றாற்போலும். இது தன்னாசையல்லது சொன்னாலும் விரும்புவாரில்லை யென்றது.

பரிமேலழகர் உரை:
கல்லாதான் சொல் காமுறுதல் - கல்வியில்லாதான் ஒருவன் அவையின்கண் ஒன்று சொல்லுதலை அவாவுதல், முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று - இயல்பாகவே முலை இரண்டும் இல்லாதாள் ஒருத்தி பெண்மையை அவாவினாற் போலும். (இனைத்தென அறிந்த சினை (தொல்.சொல்.33) ஆகலின், தொகையோடு முற்று உம்மை கொடுத்தார். சிறிதும் இல்லாதாள் என்பதாம். அவாவியவழிக் கடைப் போகாது, போகினும் நகை விளைக்கும் என்பதாயிற்று.).

மு. வரதராசன் உரை:
(கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.

மு. கருணாநிதி உரை:
கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.

சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.

Translation:
Like those who doat on hoyden‘s undeveloped charms are they,
Of learning void, who eagerly their power of words display.

Explanation:
The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood.

இது பற்றி எனக்கு மருத்துவ விளக்கம் வேணும்..... அந்தக் காலத்தில பொம்பிளைகளைப் பற்றி திருவள்ளுவர் சொல்லியிருப்பது உண்மையோ....
Image may contain: 1 person, standing, outdoor and nature

 இது பற்றி எனக்கு மருத்துவ விளக்கம் வேணும்..... அந்தக் காலத்தில பொம்பிளைகளைப் பற்றி திருவள்ளுவர் சொல்லியிருப்பது உண்மையோ....

நன்றி - முகப்புத்தகம்

Image may contain: 1 person, text

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com