Loading...

நவீன ஆறுமுக நாவலர்களின் அந்தரங்கங்கள் (வயசுக்கு வந்தவர்கள் மட்டும் வாசிக்கவும்) Share

இனி வரும் காலம் சுமந்திரன், சம்மந்தன் போன்றவர்களை நாவலர் பெருமானை நாம் பெருமையாக கதைத்துத் திரிவது போல் கதைத்துத் திரிய வேணும். இன்னும் கொஞ்சக் காலத்தில் சைவசமய புத்தகத்தில் இவர்களைப் பற்றி வராவிட்டாலும்

 இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்படும் வரலாற்றுப் புத்தகத்தில் சுமந்திரனுக்கும் சம்மந்தனுக்கும் நிச்சயம் ஒரு புகழ்ச்சியான இடம் கிடைக்கும். அவர்கள் சமாதான துாதுவர்களாக அந்தப் புத்தகத்தில் வர்ணிக்கப்படுவார்கள். நாவலர் பெருமான் என நாம் கூறித்திரியும் ஆறுமுகம் என்ற அலங்கோலம் பிடிச்சது ஆசிரியராக தான் கல்வி கற்பித்த யாழ் மத்தியகல்லுாரியில், அக் கல்லுாரி அதிபரான பேர்சிவல்பாதிரியாருக்கு வால் பிடித்து, அவரது நண்பனாக வேண்டும் என்பதற்காக பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்து உலக சாதனை படைத்ததையே சைவசமயத்தவர்கள் புகழ்ந்து தள்ளும்படி கொண்டு வந்துவிட்டார்கள்.

ஆறுமுகம் செய்த அலங்கோலங்கள் ஏராளம். அந்தக்காலத்தில் இப்படியான பேஸ்புக் இருந்திருந்தால் ஆறுமுகத்துக்குப் பின்னால முன்னால திரிஞ்சு அறுமுகத்திட எல்லா குட்டையும் அம்பலப்படுத்தியிருப்பார்கள். அந்த நேரம் சரியான சமூக ஊடகங்கள் இல்லாமல் போய் விட்டது. பைபிள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதால் ஆறுமுகம் செய்த வேலையால ஆங்கிலம் தெரியாத ஏராளமான தமிழ்ச்சனம் கிறீஸ்தவ சமயத்திற்கு மாறிவிட்டது. . ‘ஆமென்‘ என்ற வார்த்தையையும் இந்த ஆறுமுகம் புதுசா தமிழில் புகுத்திவிட்டது.

ஆறுமுகம் எங்கட ‘தேவாரம்,திருவாசகங்களுக்கு‘ ஒழுங்கான விளக்கவுரை எழுதிச்சிதா என்டால் அது இல்லை. அந்தக்காலத்து புலவர்களும், சமயகுரவர்களும் தேவாரத்தை விளங்காத தமிழில் நல்லாப் படிச்சவங்களுக்கு விளங்கக்கூடியது போல பாடிவிட்டு போய் விட்டார்கள். பிறகு அதுக்கு ஒரு பொருள் விளக்கமும் தேவையா இருக்குது. இப்பவும் ஓ.எல் ரெஸ்ருக்கு அந்த தேவாரத்தை வரிக்கிரமமாக எழுதி பொருளை எழுதுங்கோ என்டு மாணவர்களை படாத பாடு படுத்துறாங்கள். ஆனால் ஆறுமுகம் இலகு தமிழில் வைபிளை மொழி பெயர்த்து கொடுத்த பெரும் துரோகத்தைச் செய்து போட்டு ‘தன்னால் கற்பழிச்ச யுவதியை இன்னொருவனுக்கு கலியாணம் கட்டிக் கொடுத்தது போல‘ இவர் பல இந்துப் பாடசாலைகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறார் என்டு அதுதை மட்டும் பெரிசா கதைக்கிறாங்கள்.

இது எப்புடி இருக்குது என்டால் ‘பொலிசால் சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் பெயரில் வீதிக்குப் பெயர் சூட்டியது போல‘ , ‘ சுட்டுக்கொல்லப்பட்ட ரவிராஜிக்கு சிலை வைத்தது போல‘, ‘சர்வதேச விசாரணையை தடுத்துநிறுத்திவிட்டு உள்நாட்டு ஜீரிகளிடத்தில் நீதி கேட்டது போல‘ ‘சமஜ்டி, ஒற்றையாட்சி என்ற சொற்பதங்களை விட்டுவிட்டு அதிகாரங்களை மட்டும் உள்ளடக்கிய பக்கேஜை கேட்டது போல‘ இப்புடி கனக்க ‘போல‘ வை உதாரணங்களாகச் சொல்லாம். இந்தப் ‘போல‘ உதாரணங்கள் எல்லாம் எங்கட தமிழ்த்தேசியத் தலைவர்களால நடாத்தப்படுகிற திருவிளையாடல்கள். இதையே யாழ்ப்பாணத்தில இருக்கிற உதயன் ஊடகம் புகழ்ந்து பேசி செய்தி வெளியிடுது என்றால் அந்த ஆறுமுகம் காலத்தில வெள்ளைக்காரங்களின் காலை நக்கி வாழ்ந்து அதிகாரமாக இருந்த அந்த ஆறுமுகத்தையே நக்கி வாழ்ந்த சிலதுகள் அவரைப் புகழ்ந்து கதை சொல்லித் திரிஞ்சிருக்குங்கள் அந்த நேரத்தில்.

ஆறுமுகம் அந்தக் காலத்தில் பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்த நேரத்தில் அதனை எதிர்த்துக் குரல் கொடுத்த யாழ் கந்தர்மடத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் உணர்வாளர் வெள்ளைக்காரர்களால் பிடிக்கப்பட்டு குதிரையில் கயிறு கட்டி தெருத்தெருவாக கட்டியிழுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் யாருக்குத் தெரியும்?‘
ஆறுமுகம் செய்த அலங்கோலங்களை ஓலைச்சுவடியாக வெளியிட்டு பாதுகாத்து வைக்க முயன்ற அந்தகாலத்து தமிழ் உணர்வாளர் ஒருவரின் வீடு எரித்துச் சாம்பலாக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

நான் கிறஸ்தவ மக்களுக்கு எதிரானவன் இல்லை. எமது மதத்தை விட கிறீஸ்தவ மதம் சிறப்பு மிக்கது. அத்துடன் அந்த மதம் சொல்லும் கருத்துக்கள் மிகச் சிறப்பானவை. அந்த மதத்தின் போதனைகள் தேன்தமிழில் எனது காதுக்கு வரும் போது எமது சமயம் இன்னும் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்வதை நினைத்து கடும் எரிச்சல் வருகிறது. உண்மையில் அந்த மதத்தை நினைத்து பொறாமையிலேயே இதை எழுதுகின்றேன். ஆறுமுகம் கள்ளன் நல்ல ஒரு வேலை செய்திருக்கலாம்.. பேசாமல் கிறிஸ்தவ பாதிரியாராக மாறி எமது பிரதேசத்தில் உள்ளவர்கள் எல்லோரையும் கிறீஸ்தவர்களாக மாற்றியிருக்கலாம்.

சுமந்திரன், சம்மந்தன் போன்றவர்களுக்கும் எனது பணிவான வேண்டுகோள்.... நீங்கள் இனிமேல் முள்ளிவாய்க்கால் என்ற ஒரு பேரவலம் வரக்கூடாது என்பதற்காக தமிழர்களிடம் கெட்ட பெயர் எடுத்தும் தமிழர்களைக் காப்பாற்ற முற்படுவதாக சிலர் தெரிவிக்கின்றார்கள். சிங்களவர்களுக்கு இனிமேல் எம்மால் கோபமே வரக்கூடாது என்பதற்காக நீங்கள் அவர்களுக்கு என்னவெல்லாமோ செய்கின்றீர்கள். அவ்வாறு இருந்தும் சிங்களவன் கோபமாகத்தான் இருக்கிறான். ஆகவே இனிமேல் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய பணி இருக்கிறது. எல்லா தமிழர்களையும் சிங்களவர்களாக மாற்றிவிடுங்கள். அப்போது நீ்ங்கள் இன்னும் புகழின் உச்சிக்குச் சென்றுவிடுவீர்கள். சில வேளை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற சம்மந்தன் ஐயாவை சிங்களவர்கள் ஜனாதிபதியாக மாற்றிவிடவும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

நன்றி

Thanapalasingam Vasantharuban

 

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com