Loading...

இன்றைய ராசிபலன் 04.01.2017 Share

மேஷம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள்.

 பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சிறப்பான நாள்.    
 
ரிஷபம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு  கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். புகழ், கௌரவம் கூடும் நாள்.

மிதுனம்: உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுபூர்வமாக பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்  தருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.  

கடகம்: காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள்.  பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும்.  எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நிம்மதி கிட்டும் நாள்.

சிம்மம்: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தில் கொஞ்சம் சலசலப்புகள் வரும். யாரையும்  யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். லேசாக தலை வலிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். பேச்சில் இங்கிதம்  தேவைப்படும் நாள்.

கன்னி: மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்
பீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு  பெருகும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
 
விருச்சிகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.  வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.   
 
தனுசு: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.  நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை  தருவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
 
மகரம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். தோற்றப் பொலிவுக் கூடும். ஆடை, ஆபரணம் சேரும்.  வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.   
 
கும்பம்: காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துப் போகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம்  உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.  

மீனம்: காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். முன்பின் தெரியாதவர்களிடம்  குடும்ப விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com