Loading...

யாழ் வேலணையில் குளத்தில் குளிப்பதற்காகச் சென்ற சிறுமி மூழ்கிப் பலி!! Share

யாழ் – வேலணை மேற்கு சங்கத்தார் குளத்தில் குளிப்பதற்காக சென்ற சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேலணை மேற்கு பகுதியை சேர்ந்த சுரேஸ் வினோஜா என்ற 16 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறிய பொலிஸார் ஆழமான பகுதிக்கு சென்றதன் காரணமாகவே குறித்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com