Loading...

லண்டனில் சூகேட்சில் மனைவியைக் கொலை செய்து கொண்டு சென்ற இந்திய கணவன் கைது!! Share

லண்டன், லீசெஸ்டர்ஷயரில் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவரின் சடலம் அடங்கிய சூட்கேஸ் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



எவிங்டன் என்ற இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த இந்த சூட்கேஸ் குறித்து வழிப்போக்கர் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் அங்கு வந்த பொலிஸார் குறித்த சூட்கேஸை ஆராய்ந்தனர்.

அதில், கிரண் டோடியா (46) என்ற இந்தப் பெண்ணின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கிரணின் கணவர் அஷ்வின் டோடியாவை (50) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரண்டு மகன்களுக்குத் தாயான கிரண் கடந்த பதினேழு வருடங்களாக ‘டெலி கோலர்’ ஆகப் பணியாற்றி வந்தவர்.

கிரணின் கொலை குறித்து அவரது நண்பர்களும், உறவினர்களும் தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இன்முகத்துடன் பழகும் கிரணின் மரணம் தங்களை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com