Loading...

நல்லூர் ஆலயம் பற்றியும்,நல்லூர் ஆலய நிர்வாகத்தின் செயற்பாடுகள் பற்றியும் Share

நல்லூர் ஆலயம் பற்றியும்,நல்லூர் ஆலய நிர்வாகத்தின் செயற்பாடுகள் பற்றியும் நீண்டதொரு நல் அபிப்பிராயம் எனக்கு இன்றுவரை உண்டு.கட்டுப்படான வகையில் இந்துசமயத்தின் கோட்பாடுகளை,விழுமியங்களை விதைக்கும் ஆலயம் நல்லூர்.

எந்த பெளத்தஅரசிற்காகவோ,அரசியல் செயற்பாடுகளுக்காகவோ தமது நிர்வாக முறைமைகளை மாற்றியமைத்துகொள்ளவும் இல்லை என வாய்வழிகதைகள் மூலம் அறிந்துள்ளேன்.இது எந்தளவு தூரம் உண்மை என ஆராய்ச்சி செய்யவில்லை.ஆனால் கோவில் நிர்வாகத்தின் இந்த இறுக்கம் யாழ்ப்பாணத்தின் மற்றைய ஆலயங்களிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதை பலரும் அறிவர்.லட்சோ பல லட்ச மக்கள் அன்றாட திருவிழாக்கு வருவார்கள் எனில் வடமராட்சியில்சமூத்திரதீர்த்தம்காணும் அந்த மாயவன் கோவிலைப்போல தன்னை வருடத்துக்கொருதடவை கட்டட நிர்மாணிப்பில் ஈடுபடுத்தி கொள்ள அந்த நல்லூர் நிர்வாகத்திற்கு தெரியாமலும் இல்லை. ஆனால் அவர்களது செயற்பாடுகள் கால ஓட்டத்தோடு இயந்த திட்டமிடலை நன்குஉள்ளீர்த்ததாகவே இருக்கின்றதை கவனித்தில் கொள்க.அதுமட்டுமின்றி ஆலய அன்றாட பூசைவேளைகளின்போது நேரம் மிக சரியானதாகவே கடைப்பிடிக்கவும் படுகின்றதாம்.இதெல்லாம் ஏனைய பெருங்கோவில்களில் காணமுடியாததொன்று.அதைப்போலவே அர்ச்சனைப் பணமும்.சரி அடுத்து தீயாகதீபம் திலீபன் தன் இறுதி மூச்சுவரை நல்லூரடியில் உண்ணா நோன்பிருந்து தன் உயிரை தியாகம் செய்தார்.தீலீபனின் தூரநோக்குடைய பார்வையில் நல்லூர் ஆலய சூழல் சர்வதேசமட்டங்களின்,கபட இந்திய அரசின் பார்வையில் கூட எளிதில் படக்ககூடிய கேந்திர நிலையமாக இருக்கும் என்ற எண்ணப்பாடு இருந்திருக்கும்.அப்படியான சூழலில்தான் விரைவுத்தன்மைகொண்டதாக எமது கோரிக்கைகளை முன்வைத்து போராடவும் முடியும். இவ்வாறு காணப்படும் நல்லூர் ஆலய சூழலில் போராட்டங்கள் மேற்கொண்டால் புனிதம்பாதிக்கும் என்ற வாசகம் பொருத்தமற்றதொன்று.ஆனால் அது எந்த விதமான அரசியல் பின்னணியை கொண்டும் வைக்கப்பட்டிருக்கமாட்டாதென்பதே எனது நம்பிக்கை.ஆயுத அடக்குமுறைக்கும்,பெளத்தமேலாதிக்க சக்திகளுக்கும்,அரசியல் செயற்பாட்டுக்கும் அஞ்சாத அந்த நிர்வாகம்.இந்த புனிதங்காக்க வேண்டும் என்ற பலகையினை யாரும் சொல்லிதான்வைக்க வேண்டிய அவசியமில்லை அவர்களுக்கு.ஒருவேளை நல்லூரில் இடம்பெறும் போராட்டங்களின் வலிமை கொடுக்கும் தாக்கம் தமது நிர்வாகப் பெயர்கொண்டு அரசியலாக்கப்பட்டுவிடுமோ?!.என்ற அச்சத்தில் எழுந்ததாக கூட இருக்கலாம்.சட்டரீதியாக அந்த இடத்தில் போராட்டங்களை நடத்தவேண்டாம் என அவர்கள் கூறுவார்களேயானால் திருவிழாக்கால வீதி மாற்றல் திட்டங்களை ஒருசாரர் தமக்கு சார்பாக பயன்படுத்தி ஆலய,சைவ நடவடிக்கைகளை சிதைத்து விடுவார்கள் என்ற எண்ணம் அவர்கள் மனதில் எழுந்திருக்கும்( திருவிழா வில்கோடியில் இலாபமடையும் மாநகரசபை இவ்வாறான சிக்கல் வந்தால் தீர்கும் என்பது வேறுகதை).ஆகவேதான் இந்த அநாமதேய விளம்பரபலகை மூலம் பல விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பார்த்து இருக்கிறார்கள் போல்.வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அரசிற்கு வளைந்து கொடுக்கும் தமிழ் அரசியல் தலைமைகளை போல நல்லூர் நிர்வாகம் ஒருபோதும் மாறமாட்டாது அப்படிமாறினால் தனதுதலையில் மண்அள்ளி போடும் செயற்பாடாகவே மாறும்.அந்த பலகையை மட்டும் குற்றங்கண்டு அதைபற்றி கதைத்து காலத்தை ஓட்டுவதை விட்டு,வாக்குறுதி அரசியல்செய்யும் நம்மவர்களுக்கு பாடங்கற்பிக்கும் இளைஞர் எழுச்சியை ஒருகட்சி,ஒருஅமைப்பு சாராது நாம்காட்டி நிற்கவேண்டும் அதுவே காலத்தின் தேவையும்,எதிர்கால தேவையும்.
*யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்,பிழைகள் இருந்தால் கீழே பதிவிடுங்கள்.*

நன்றி

முகப்புத்தகம்

Image may contain: text

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com