Loading...

யாழ்ப்பாணக் காவாலிக் குஞ்சுமணிகளின் வாள் வீச்சுக்களின் பின்னணி என்ன? (photos, Videos) Share

யாழ்ப்பாணக் காவாலிக் குஞ்சுமணிகளின் வாள் வீச்சுக்களின் பின்னணி என்ன?

அண்மையில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய யாழ்ப்பாணம் நல்லுார் அரசடிப் பகுதியில்  காவாலிகளால் நடாத்தப்பட்ட வாள் வெட்டுக் காட்சிகளின் முழுமையான காணொளிக் காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும்.


குறித்த காட்சிகளில் கடை ஒன்றினுள் நுழைந்த காவாலிகள் சிலர் இளைஞன் ஒருவனை வாள்களால் 15 தடவைகள் வெட்டுவது காட்டப்பட்டுள்ளது. வெட்டு வாங்கிய இளைஞன் கோழிச் சேவலால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு எழுந்து ஓடும் கோழி போல சாதாரணமாக ஓடிச் செல்கின்றான். அவனது உடம்பில் பெரும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

2


உண்மையில் இந்தக் காவாலிகள் கொண்டு வந்த வாள்கள் அவர்களது ஆண் தன்மை போல்  செயற்படாத  வாள்களா? அல்லது  வெட்டு வாங்கியவன் சினிமாப் படங்களில் நடிக்கும் விஜயகாந் போல இரும்பே அச்சப்படும் அளவுக்கு வலிமையானவனா?  அல்லது வடிவேலுவைப் போல வாள் வெட்டில் ஈடுபட்ட காவாலிகள் அந்த விசயத்துக்கு சரிவராதவர்களா??


மிகத் திட்டமிட்டு நடாத்தப்பட்ட நாடகமே குறித்த வாள் வெட்டாகும். எதற்காக நடாத்தப்பட்ட நாடகம் இது..


2009ம் ஆண்டு  விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்து பெரும் வெற்றி கண்ட இராணுவம் தங்களுக்கு வரப்போகும் ஆபத்தை உணரவில்லை. விடுதலைப் புலிகள் இருந்த போது தமிழர் பிரதேசத்தில் பெரும் நிலப்பரப்பை சுவீகரித்து கொண்டாடிக் கொண்டிருந்த படைத்தரப்பினர் விடுதலைப் புலிகளின் மறைவுக்குப் பின்னர் நடந்து கொண்டிருக்கும் வித்தியாசமான தாக்குதல் தந்திரோபாயத்துக்கு ஈடுகொடுக்க முடியாது திணறிக் கொண்டிருக்கி்ன்றார்கள்.


புலிகள் இல்லாத இடத்தில் இராணுவம் எதற்கு என தமிழர் தரப்புக்கள் கேள்வி எழுப்பி உலகநாடுகள் வரை தங்கள் கோரிக்கைகளை எடுத்துச் சென்று நியாயம் கேட்டு தமிழர் பிரதேசங்களில் படைக்குறைப்பை மேற்கொண்டு வருகின்றன. சற்றும் எதிர்பார்க்காத இந்தச் செயற்பாட்டால் நிலை குலைந்து போயுள்ள படையினர் தமது தந்திரோபாயங்களை மாற்றி தமது இருப்பைத் தக்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இதற்கான பல நடவடிக்கைகள் படையினரால் மும்முரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் தம் மீது நல்லபிப்பிராயத்தைக் கொண்டு வருதல், மக்கள் மத்தியில் தாம் இருக்க வேண்டிய அவசியத்தை அவர்களுக்கு உணர்த்துதல் போன்ற செயற்பாடுகளை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

2013ம் ஆண்டு யாழ் மாவட்ட இராணுவத்தளபதியாக இருந்த ஹத்துருசிங்க இதற்கான நடவடிக்கைகளை முதலில் தொடங்கினார். அவரது நடவடிக்கைகளில் ஒன்றாக உருவானதே யாழ்ப்பாண ரவுடிக் குழுக்கள். படையினரால் ஆரம்பிக்கப்பட்ட சிவில்இராணுவப் பிரிவுக்காக முன்னாள் போராளிகளில் சிலரும் யாழ்ப்பாணத்தில் வேலை வெட்டி இல்லாது திரிந்தவர்களும் அரசாங்க சம்பளத்திற்காக அப் படையணிக்குள் உள்வாங்கப்பட்டார்கள்.


குறித்த சிவில்ப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்ட பணம் யாழ்ப்பாணத்தில் உள்ள ரவுடிகள், புறம்போக்குகள் என பலருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்களை யாழ்ப்பாணத்தில் ரவுடிகளாக உருவாக்கி மக்களின் நிம்மதியைக் கெடுக்கும் செயற்பாட்டை தந்திரமாக செய்யத் தொடங்கினர். இராணுவம் தாம் தங்கியிருந்த பல இடங்களில் இருந்து  விலகிச் சென்ற போது  அப்பகுதிகளில் குறித்த காவாலிகளை உலாவ விட்டு பொதுமக்களுக்கு தொல்லைகள் கொடுக்கத் தொடங்கினர்.


இவ்வாறு செயற்பட்ட ஒரு பிரிவே இணுவில் பகுதியில் 2013ம் ஆண்டு கோப்பாய் பொலிசாரால் பிடிக்கப்பட்டது. இக் குழுவுக்கு பொலிசாரே ஆவா எனப் பெயரைச் சூட்டினர். உண்மையில் இந்தக் குழுவில் பிடிக்கப்பட்ட ‘ஆவா‘ என்ற ஒரு இயலாமையான இளைஞனையும் வேறு சிலரையும் தவிர ஏனையவர்கள் படையினருடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். இவர்களை கோப்பாய் பொலிசார்  விசாரணையின் பின்னர்  படை அதிகாரிகளின் உயர் அழுத்தம் காரணமாக விட்டுவிட்டார்கள் எனத் தெரியவருகின்றது.


இந்த ஆவா குழுவைப் பிடிப்பதற்கு கோப்பாய் பொலிஸ் அதிகாரி துணிந்து செயற்பட்டமைக்கு உண்மையான காரணம் என்னவெனின் அந் நேரத்தில் குறித்த குழுவை மேற்பார்வை செய்து வந்த படைத்தரப்பு அதிகாரிக்கும் பொலிஸ் அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலே காரணம் எனத் தெரியவருகின்றது.  தனது பவரைக் காட்டவே பொலிஸ் அதிகாரி குறித்த குழுவைச் சுற்றி வளைத்ததாகவும்  அந் நேரத்தில் கதைகள் உலா வந்தன. அதன் பின்னர் உயர் அழுத்தம் காரணமாக படையினருடன்  இணைந்து செயற்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனராம்.


மகிந்த அரசால் உருவாக்கப்பட்ட கிறீஸ்மனிதர்கள் போல் இந்த ரவுடிகளும் பெரும் அட்டகாசங்களை தொடர்ந்து செய்தவண்ணம் உள்ளார்கள். குறித்த ரவுடிகளில் தற்போது மிக முக்கியமானவர்களாக 6 பேர் தொழிற்படுவதாகவும் அவர்களுக்குக் கீழ் அப்பாவி மாணவர்கள் சிலரும் எடுபட்டு செயற்படுவதாகவும் தெரியவருகின்றது. குறித்த மாணவர்கள் மற்றும் ரவுடிகளுடன் தொடர்புடையவர்கள் தென்னிந்திய சினிமாக் கதாநாயகர்களாக தங்களை நினைத்து கேவலமான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.


இணுவில் பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்ற இராணுவுத்துடன் தொடர்பான  ரவுடிகள் அப்பகுதி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் கதாநாகயகர்களின் வேடத்துடன் யாருக்கும் அஞ்சாத செயற்பாடுகளை செய்து வந்ததால் அவர்களின் ரவுடித்தனம் போல் தாங்களும் செயற்படலாம் என்ற எண்ணத்திலேயே ஏனையவர்களும் செயற்பட்டுள்ளனர்.


 மிக நேர்த்தியாக செயற்பட்ட ஒரு குழு குறித்த மாணவர்கள் மற்றும இளவயதானவர்களிடம் கஞ்சா மற்றும் போதைப் பாக்கு போன்றவற்றை விநியோகித்து அவர்களை அதை நுகரச் செய்து அவர்களை மூளைச் சலவை செய்து இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு அவர்களைப் பிரயோகித்து வருகின்றது.  
யாழ்ப்பாணத்தில் உள்ள சில புகழ்பெற்ற கல்லுாரிகளில் கல்வி பயிலும் மாணவர்களையும் தங்கள் வலைக்குள் வீழ்த்திய குறித்த ரவுடிக் குழு அவர்களுக்கும் போதைப் பொருளை விநியோகித்து மூளைச்சலவை செய்துள்ளது. அவர்களை மூலைச்சலைவை செய்யும் போது அவர்களுக்கு புலிகள் உருவாகுகின்றனர். அதற்கான நடவடிக்கைகளை இன்றிலிருந்து ஆரம்பியுங்கள். மக்களைக் குழப்புங்கள், பொலிசாரை திக்குமுக்காட வையுங்கள் என அவர்களுக்கு அறிவுறுத்தி மிகவும் நேர்த்தியாக தமது செயற்பாட்டை செய்து வருகின்றது இக்குழு.

இக்குழுவையும் இதனோடு தொடர்புடையவர்களையும் பொலிசார் பிடித்தாலும் பொலிசார் பிடிபட்டவர்களை தாக்கி விசாரணை செய்யாது அவர்களை உபசரித்து நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்தி விளக்கமறியலில் வைக்கச் செய்து பின்னர் சிறு குற்றவாளிகள் போல் அவர்களது வழக்கை தாக்கல் செய்து விடுதலையாக்கிவிடுகின்றனர் என தகவல்கள் கசிந்துள்ளன. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் செயற்படாது ரவுடிகளாக உள்ளவர்களையே பொலிசார் கடுமையாகத் தாக்கி அவர்களிடம் கைக்குண்டு இருந்ததாகவும் பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி நீண்ட காலம் சிறையில் அடைக்கின்றனர் எனவும் தெரியவருகின்றது.


பொலிசாரால்  தேடப்பட்டு வருவதாகவும் பிடியாணை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்து தேடுதல் என்ற பெயரில் பீலா விட்டுக் கொண்டிருக்கும் பொலிசாருக்கு தேடப்பட்டு வருபவர்கள் தற்போது என்ன நிலையில் இருக்கின்றனர், எங்கு இருக்கின்றனர், யாரின் மேற்பார்வையில் இருக்கின்றனர் என சகலதும் தெரிந்தேயுள்ளது.

படையினரால் வளர்க்கப்பட்டு வரும் விடுதலைப் புலிகள் இவர்கள். இனிமேல் இவர்களில் ஒருவர் தமிழீழ தேசித்தலைவராக வருவதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது. தங்களுக்கான எதிரியையும் தாங்களே உருவாக்கி வைத்திருக்கவே அரசாங்கம விரும்புகின்றது. தமிழர்களில்  இருந்து இனி வீராவேசம் கொண்டு சிங்கள இனம் மீது எவரும் போரிட முடியாதவாறா செயற்பாடுகளை சிங்கள தேசம் உருவாக்கி வெற்றி கண்டுள்ளது. 

Image may contain: 10 people

இவன் சன்னா எனப்படும் பிரசன்னா. இவன் கடந்த வருட இறுதிவரை யாழ் கோப்பாய் வடக்குப் பகுதியில் தங்கியிருந்ததாகவும் தற்போது மலையகப்பகுதிக்கு சென்று விட்டதாகவும் ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இவன் தொடர்பாக பொலிசாருக்கு அனைத்து தகவல்களும் தெரிந்து பொலிசார் வீட்டுக்குள் ஒளிந்திருக்கும் யானையைத் தேடுவது போல் தேடிக் கொண்டு இருப்பதுதான் சிரிப்பை வரவழைக்கின்றது.

 

Image may contain: 1 person, glasses and beard

யாழ்ப்பாண ரவுடிகளின் கூட்டத்திற்கு படைத்தரப்பால் வழங்கப்படும் வாள்ப் பயிற்சி, கத்தி, பொல்லுகள் போன்றவற்றைப் பாவிக்கும் ஆயுதப்பயிற்சி

 

Image may contain: one or more people

பொலிசாரால் மும்முரமாகத் தேடப்பட்டுவரும் தேவா படையினரின் முகாமில் சுதந்திரமாக திரியும் காட்சிகள்

 

Image may contain: one or more people, people standing and outdoor

விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சிறுத்தையை வைத்திருப்பது போல்இராணுவத்தால்  இவருக்கும் பயிற்சி கொடுபடுகின்றது. ஏனெனில் வருங்காலம் இவர் தேசியத்தலைவராக ஆக்கப்படலாம்2

Image may contain: 1 person, outdoor

தற்போது இவர்களைப் போல் யாழ்ப்பாணத்தில் உள்ள ரவுடிகளில் 124 பேரின் புகைப்படங்களுடன் கூடிய தகவல்களும் யாழ்ப்பாணத்தில் நடக்கும் வாள் வெட்டு களவு கற்பழிப்பு படுகொலைகள் போன்றவற்றுக்கு காரணம் என்ன என்பதையும் அடுத்த பதிவில் தருகின்றோம். அதுவரை காத்திருங்கள்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com