Loading...

கொழும்பு பம்பலப்பிட்டியில் 15 வயது மாணவி பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி Share

பம்­ப­ல­ப்பிட்டி பகு­தியில் உள்ள பாட­சா­லையின் க.பொ.த. சாதா­ரண தரத்தில் கல்வி பயிலும் 15 வய­து­டைய மாணவி ஒருவர் அப்­பா­ட­சா­லையின் ஆரம்ப பிரி­வுக்கு செல்லும் மேம்­பா­லத்தில் இருந்து

 கீழே குதித்­ததில் படு­கா­ய­ம­டைந்து களு­போ­வில போதனா வைத்­தி­ய­சா­லையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரு­கின்றார்.

இச்­சம்­பவம் நேற்று முன்தினம் முற்­பகல் 10. 30 மணி­ய­ளவில் பாட­சாலை நேரத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்தனர்.

எனினும் இந்த விவ­காரம் தொடர்பில் பொலிஸ் தரப்பும் மாண­வியின் தரப்­பிலும் முன்­னுக்கு பின் முர­ணான விட­யங்கள் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன.

இந்த சம்­பவம் தொடர்பில் அறிய முடி­வ­தா­வது,

 நேற்று முன்தினம் குறித்த மாணவி கல்­வி­ கற்கும் வகுப்பில் 400 ரூபா காணாமல் போன­தாக ஒரு முறைப்­பாடு வகுப்­பா­சி­ரி­யரின் கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. இதன் போது குறித்த மாண­வியே அந்தப் பணத்­தினை எடுத்­த­தாக வகுப்புத் தலைவர் மற்றும் ஆசி­ரியர் ஆகியோர் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர். இதனால் ஏனைய மாண­வர்கள் குறித்த மாண­வியை ஏளனம் செய்­த­தா­கவும் அத­னை­ய­டுத்தே மன உளைச்­ச­லுக்கு உள்­ளாகி­யுள்ள குறித்த மாணவி பாட­சாலை மேம்­பா­லத்தில் இருந்து கீழே குதித்த­தா­கவும்   மாண­வியின் தாயார் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

எனினும் பாட­சாலை தரப்பு பொலி­ஸா­ருடன் சேர்ந்து விட­யத்தை மறைத்து வேறு கார­ணங்­களால் தனது மகள் தற்­கொலைக்கு முனைந்­த­தாக உண்­மைக்கு புறம்­பான தக­வல்­களை வெளி­யிட்டு வரு­வ­தா­கவும், இது தொடர்பில் மனித உரி­மைகள் ஆணைக்குழு­விலும் முறைப்­பா­டு­களைச் செய்­துள்­ள­தா­கவும் குறித்த மாண­வியின் தாயா­ர் தெரி­வித்தார்.

இது தொடர்பில்  பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் ஊடாக பம்­ப­லப்­பிட்டி பொலி­ஸாரை தொடர்­பு­ கொண்டு சம்­பவம் தொடர்பில் கேசரி வின­வி­யது. குறித்த மாணவி மன உளைச்சல் கார­ண­மாக தற்­கொ­லைக்கு முயன்­றுள்­ள­தாக தெரி­ய ­வந்­துள்­ள­தாக பொலிஸார் எமக்கு பதி­ல­ளித்­தனர்.   மன உளைச்­ச­லுக்­கான கார­ணத்தை நாம் வின­விய போது காதல் விவ­கா­ரமே பின்­ன­ணியில் உள்­ள­தாக அவர்கள் தெரி­வித்­தனர்.

எனினும் இதனை முற்­றாக மறுக்கும் குறித்த மாண­வியின் தாயார், பொலிஸார் விட­யத்தை திசை திருப்­பு­வ­தாக கூறினார். அத்­துடன் தனது மக­ளுக்கு பணம் தொடர்பில் எந்தச் சிக்­கலும் இருக்­க­வில்லை எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

சம்­பவம் தொடர்பில் பம்­ப­லப்­பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில்,  ஒரு கால், ஒரு கை மற்றும் முதுகெலும்பு பகுதியில் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ள மாணவி தொடர்ந்தும் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com