Loading...

மன்னார் காட்டுக்குள் எச்சமாக மீட்கப்பட்ட நிசாந்தன் யாழினிக்கு நடந்தது என்ன? (photos) Share

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன்குளத்தைச் சேர்ந்த நிசாந்தன் யாழினி (32) என்னும் இரண்டு பிள்ளைகளின் தாயார் சென்ற டிசம்பர் மாதம் 29ம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் தற்போது மன்னார் – கீரிசுட்டான் பகுதியில்

 உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொண்டர் ஆசிரியரான இவர் இரண்டு பிள்ளைகளின் தாய் என குறிப்பிடப்படுகின்றது.


குறித்த பெண்ணின் இறப்பால் பெண்ணின் பிள்ளைகளான (10வயது, 8வயது) பெண் பிள்ளைகள் இருவரும் மனரீதியில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதாக பாண்டியன்குளம் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த தொண்டர் ஆசிரியரது மரணம் தொடர்பில் மன்னாரில் புள்ளி விபரவியல் திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
சடலம் மீட்கப்பட்டுள்ள இடத்திற்கு இன்று வியாழன் மாலை சென்ற மன்னார் மாவட்ட நீதவான் சடலத்தை பார்வையிட்டுள்ளதோடு மீட்கப்பட்ட சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.


மேலதிக விசாரனைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த ஆசிரியர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி அளவில் காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ள நிலையில் அவரது சடலம் ஆடைகள் மற்றும் தடையங்கள் மூலம் அவரது உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


-கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணின் கணவர் கடந்த சில வராங்களுக்கு முன்னர் ஓமந்தைப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில்  கைகள் கட்டப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


-குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கோள்ளப்பட்ட விசாரனைகள் மூலம் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பாக மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடர்பை ஏற்படுத்திய போதும் குறித்த நபரின் கைதினை அவர் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தகக்து. Image may contain: outdoor and natureImage may contain: plant and outdoorImage may contain: 1 person

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com