Loading...

புருசனை விட்டு ஓட்டம்!! யாழ் யுவதியை மணம் முடித்த கடற்படைச் சிப்பாய் நடுத் தெருவில்!! Share

தமிழ் பெண்ணை திருமணம் முடித்ததால் தன்னை கடற்படையிலிருந்து நீக்கி விட்டதாகவும் அதனால் தனக்கு வாழ வழியற்று போனதாகவும் எனவே தன்னை பராமரிக்குமாறு கோரி

முன்னாள் கடற்படை வீரர் ஒருவரால் அவருடைய மனைவிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த சிங்கள இளைஞர் ஒருவர் இலங்கை கடற்படையில் பணிபுரிந்து வந்தார். 2006 ஆம் ஆண்டு அவர் கொழும்பு பிரதேசத்தில் வைத்து மண்டைதீவை சேர்ந்த தமிழ் பெண்ணொருவரை திருமணம் செய்துள்ளார்.  இச்சம்பவம் கடற்படையினருக்கு தெரிய வந்ததையடுத்து அவரை பணி நீக்கம் செய்துள்ளனர். அதன் பின்னர் அவரை திருமணம் செய்த பெண்ணும் அவரை கைவிட்டு சென்றுள்ளாள். இந்நிலையில் குறித்த முன்னாள் கடற்படை வீரர் தன்னை பராமரிக்குமாறு கோரி தன்னுடைய மனைவிக்கு எதிராக தம்புத்தேகம நீதிமன்றில் தாபரிப்பு வழக்கொன்றை கடந்த மாதம் தாக்கல் செய்துள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com