முகநூல் நண்பர்களுக்கு யாழ்ப்பாண இளம்பெண் சிந்துவின் வேண்டுகோள் இது!! Share

இங்கே முகநூலிற்க்கு பெண்கள் வருவது குறிப்பாக எந்த ஆணுடனும் சரசம் கொள்ளவோ, ஆபாசமாக பேசவேண்டும் என்றோ, வெட்டியாக கடலை போடவேண்டும் என்றோ, தனது இச்சைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலோ ,

அல்லது நீங்கள் என்ன நோக்கத்தில் அவர்களை நண்பர்களாக்க விழைகிறீர்கலோ அந்த எண்ணத்திலோ அவர்கள் வருவது இல்லை.
மாறாக தனது உலகத்தை விரிவு படுத்த வேண்டும் என்ற ஆவலுடனும், தன்னைப் போன்ற மற்ற தோழிகள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவும், உள்ளத்தில் புதைந்து கிடக்கும் ரணங்களை சற்று மறைத்து விட்டு மனதினை ஆசுவாசப் படுத்திக் கொள்ளவும், திறமை மிக்க தோழிகளை இணைத்துக் கொள்ளவும், மரியாதையான நண்பர்களையும், உறவுகளையும் பெற்றுக்கொள்ளத்தான் இங்கே வருகிறார்கள்.
மேலும் இங்கு உள்ள ஆண்கள், பெண்கள் என்று பெரும்பாலும் ஏதோ ஒரு விதத்தில் காயம் பட்டவர்களாகவும் இருப்பார்கள் . அல்லது இல்லாமலும் இருக்கலாம், அதற்காக அவர்களின் அந்தரங்க விடயங்களில் நீங்கள் தலையிடுவது மிகவும் அநாகரீகமாகும். ஒரு ஆண் நட்பினை பெண் ஏற்றுக்கொள்கிறாள் என்றால் அது அந்த ஆணின்மீது உள்ள ஈர்ப்பின் காரணம் அல்ல, மாறாக ஏற்கனவே நட்பு வட்டத்தில் உள்ள ஒருவரது பெயர் (Mutual Friend ) இருக்கும் பட்சத்தில் அவரின் மீதான நம்பிக்கையினால் தான் அந்த பெண் நட்பு அழைப்பை ஏற்கின்றார்கள்.
உடனே அவர்களிடம் சென்று வீட்டு விலாசம் முதல், செல்போன் எண், whatsapp எண், பாட தெரியுமா? ஆட தெரியுமா? கல்யாணம் ஆச்சா? ஏன் என்கூட இன்பாக்ஸில் பேசமாட்டேன் என்று சொல்றீங்க, நான் நல்லவன் , உங்க போட்டோ குடுங்க , இன்னும் இங்கே பதிய இயலாத வார்த்தைகளில் இம்சைகள் செய்வது எந்த வகையில் ஏற்றுகொள்ள இயலும். உங்கள் குடும்பத்தை சார்ந்த, உங்கள் மனைவியோ, உங்கள் மகள்களோ, அல்லது உங்களின் உறவுகளோ இப்படி ஒரு நிலையை எதிர்கொள்ள வேண்டி வந்தால் மட்டும் உங்களின் போலி மீசை ஏன் துடிக்கின்றது என்று புரியவில்லை.
உங்களின் மீது மதிப்பு வந்தால், மரியாதையை இருந்தால், நட்பிற்கு நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்ற எண்ணம் தோன்றினால், கண்டிப்பாக உங்களை குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளகூட தயங்க மாட்டார்கள் பெண்கள்.
எனவே பெண்களை கவரும் எண்ணத்தோடு இன்பாக்ஸில் கடலை போடாதீர்கள். உங்கள் உலகத்தை நல்ல எண்ணங்களோடு அமைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இது பொதுவான ஒரு சமூக வலைத்தளம். பல பயனுள்ள விடயங்கள் உலா வரும் ஒரு உலகம்.
உலகத்தொடர்பை உங்களின் விரல்களை கொண்டு தீர்மானியுங்கள் . நீங்கள் எந்த ரகம் என்று.
சற்று காட்டமாக இருந்தால் மன்னிக்கவும். யாரையும் குறிப்பிட்டு இதனை இங்கே பதியவில்லை....................

Image may contain: text

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..