Loading...

கேப்பாபுலவில் மக்களைச் சுட்டுக் கொல்ல இராணுவம் தயார்!! அதிர்ச்சிக் காட்சிகள் (photos) Share

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் மீள்குடியேறுவதற்காக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.


இந்த மக்களின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள்   பல்வேறு தரப்புக்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மக்களும் தங்களுடைய காணிகள் மீண்டும் தங்களுக்கு கிடைக்காவிடின்   விமானப்படையினரின் தடையையும் தாண்டி தங்களின் காணிகளுக்குச் செல்ல வேண்டிவரும் என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று  மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில் விமானப்படையினர் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள்.

அதில் “இது விமானப்படையினரின்  காணியாகும் தேவையில்லாமல் உட்செல்லல் தடை” என்றும்  “தேவையில்லாமல் சென்றால் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காவீர்கள்” என்ற எழுத்து  பிழையுடன் அறிவித்தலை ஒன்றை காட்சிப்படுத்தியிருக்கின்றார்.

இது அனைத்து தரப்பினர்களிடமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.  தங்களின்  சொந்த காணிகளுக்குச் செல்வதற்காக  மக்கள் மேற்கொள்ளும்  ஜனநாயக போராட்டத்தை நல்லாட்சி அரசு ஆயுத முனையில் நசுக்க முனைக்கிறது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை

பச்சிளம் குழந்தைகளுடன் இராப்பகலாக தொடர்ந்து முன்னெடுத்துவரும் நிலமீட்பு போராட்டத்தை கலைப்பதற்காக நாய்களை தூண்டி ஜனநாயக போராட்டக்காரர்களைக் கலைக்கும் கொடூர முயற்சியில்

 

 இராணுவத்தினர் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக பிலவுக்குடியிருப்பு மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

தமது நிலத்தில் இராணுவத்தினர் சுதந்திரமாக வாழ்ந்து வரும் நிலையில் தாம் வெயில், பனியில் 18 ஆவது நாளாக தொடர்ந்தும் போராடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

புலவுக்குடியிருப்பில் 84 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் தமது சொந்த காணிகளில் மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி பதினெட்டாவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தம்மை பல்வேறு வழிகளில் இராணுவத்தினர் அச்சுறுத்தி வருவதாக பிலக்குடியிருப்பில் பெற்றோருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு தொடர்ந்தும் யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு ஆதரவு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கோப்பபுலவு பிலவுக்குடியிருப்பிற்கு விஜயம் மேற்கொண்டு நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை மங்களாராஜா உள்ளிட்ட அருட்தந்தையர்கள் மக்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இதேவேளை கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்ட இடத்திற்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
Image may contain: 1 person, sitting
கேப்பாபுலவு மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காகவே தாம் இன்றைய தினம் கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் புதிய ஜனநாயக லெனின் மாக்சிய கட்சி உறுப்பினர்கள் இன்றைய தினம் கேப்பாபுலவிற்கு வியஜம் மேற்கொண்டதுடன், எதிர்வரும் நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவும் இன்று பிலவுக்குடியிருப்பிற்கு விஜயம் மேற்கொண்டதுடன், மக்களின் வளமான நிலங்களே அதிகளவில் இராணுவத்தால் கையகப்படத்தபட்டுள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 84 குடும்பங்களில் 25 குடும்பங்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் எனவும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை தெரிவித்தார்.

 Image may contain: bridge and outdoor

பச்சிளம் குழந்தைகளுடன் இராப்பகலாக தொடர்ந்து முன்னெடுத்துவரும் நிலமீட்பு போராட்டத்தை கலைப்பதற்காக நாய்களை தூண்டி ஜனநாயக போராட்டக்காரர்களைக் கலைக்கும் கொடூர முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக பிலவுக்குடியிருப்பு மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

தமது நிலத்தில் இராணுவத்தினர் சுதந்திரமாக வாழ்ந்து வரும் நிலையில் தாம் வெயில், பனியில் 18 ஆவது நாளாக தொடர்ந்தும் போராடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் தொடர் போராட்டம் இன்று 18 ஆவது நாளை எட்டியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைபற்று பிரதேச செயலாளர் பரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராமத்தில் ஸ்ரீலங்கா விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவிக்கும் முகமாக அங்கு செல்பவர்களை விமானப் படையினர் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈ:டுபட்டு வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனினும் எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் காணியை மீட்கும் போராட்டம் தொடரம் எனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடலுக்கு கிழக்காக அமைந்துள்ள பிலவுக்குடியிருப்பில் உள்ள, 84 குடும்பங்களுக்கச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com