வாட்ஸ்அப்பில் ஆபாச படம்! அதிர்ச்சியில் உறைந்த பெண் அதிகாரிகள்! அவரா இப்படி ?..!! Share

ஆந்திர மாநிலம் கர்னூர் மாவட்டத்தில் நந்தியால் என்ற நகராட்சி உள்ளது. நந்தியால் நகராட்சியில் சமீபத்தில் அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்களுக்கென வாட்ஸ் அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.இதில் அங்கு பணிபுரியும் பெண் நகராட்சி அதிகாரிகளும், பெண் கவுன்சிலர்களும் உள்ளனர். அலுவலகம் சம்பந்தமான மெசேஜ்களை அனுப்பவதற்கும், பெறுவதற்கும் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவு நேரத்தில் சில ஆபாச வீடியோக்களை, அதிகாரிகளுக்கான வாட்ஸ் ஆப் குழுவில் நகராட்சி துணைத்தலைவர் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த ஆபாச வீடியோவில் அரை நிர்வாணமாக பெண் ஒருவர் நடனமாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் அதிகாரிகள், தங்களுடைய உயர் அதிகாரிகளிடம் நகராட்சி துணைத்தலைவர் குறித்து புகார் அளித்துள்ளனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள துணைதலைவர், தனக்கு ஸ்மார்ட் போனை எப்படி பயன்படுத்துவது என தெரியாது எனவும், தவறுதலாக அந்த வீடியோவை வாட்ஸ் ஆப் குழுவுக்கு அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் நந்தியால் நகராட்சியின் பெண் கவுன்சிலர்களும், அதிகாரிகளும் துணைதலைவரின் மன்னிப்பை ஏற்க முடியாது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..