கலியாணவீட்டில் வீடு சாப்பாட்டுப் பார்சல் கட்டி வீட்டுக்கு கொண்டு வருவது எப்பிடி ? 10 வழிமுறைகள் Share

திருமண வீடு சாப்பாட்டுப் பார்சல் கட்டி வீட்டுக்கு கொண்டு வருவது எப்பிடி ? 10 எளிய வழிமுறைகள்

1)போனதும் நமக்கான வாய்ப்புகளை ஊற்றுநோக்க வேண்டும் அதாவது

செல்ப் சேர்விஸ்  அல்லது பிளெட் செய்து தருகிறார்களா என பல விடயங்களை அவதானிக்க வேண்டும் (இது அனுபவத்தை அடிப்படையாக கொண்ட விடயம்)

2) வீட்டிலிருந்தே பார்சல் செய்ய தேவையான லஞ்ச் ரிசு ,பேப்பர்  மற்றும் bag என்பவற்றை மனைவியின் பெரிய கை பையிலே கொண்டுபோதல்
அதிக நன்மை பயக்கும் ,இவற்றை  வீட்டுகாரரிடமோ சொந்தகாரர்களிடமோ  கேட்டு சங்கட படதேவை இராது

* முக்கியமாக சொப்பிங் bag தவிர்த்தல் நலம்
பத்து ரூபா பிளாஸ்ரிக் பை எனில் சாப்பாடு பார்சல் என மற்றவர்கள் கணிக்க வாய்ப்பு குறைவு

3)செல்ப் சேர்விஸ் எனில் முதலில் நம்பங்கை எடுத்து வெட்டு வெட்டு என வெட்டுவதையே நம்மவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.பின்னரே பார்சல் பக்கம் கவனம் செலுத்துகின்றனர் இது தவறென
" பார்சல் எக்ஸ்பேர்களின் " கருத்து  இருக்கிறது
முதல் தடவையே எடுத்து லஞ்சு ரிசுவை அப்படியே ஒரு சுற்று சுற்றி பெரிய கைப்பையில் வைத்து விடல் நல்லது

4)பந்தியில் அல்லது டேபிள் வரிசையில் உட்காரும் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது
எங்காவது ஓரத்தில் இடம் எடுத்து கொண்டால் எல்லா வேலைக்கும் வசதியாக இருக்கும்  யாரும் பெரிதாக கண் போட மாட்டார்கள்

ஐஸ்கிரிம் கொண்டு வரும் பொடியன்களை மாறி மாறி கூப்பிட்டு பையை நிரப்பலாம்

5)  செல்ப் சேர்விசஸ் எனும் போது கோழிக்கறி எடுத்து குடுக்க ,இறால் வரட்டல் குடுக்க என தனித்தனி ஆட்களை இப்போதெல்லாம் செட் செய்து விடுகிறார்கள் அவர்கள் இல்லாத ப்புபே செட் அல்லது அவர்கள் இல்லாத நேரமாய் உள்ளே நுளைந்து இரண்டு மூன்று பீஸ் அல்லது நமது தேவைக்கு ஏற்ப எடுத்து விடுவது நம் சாமர்த்தியம்

6) குழந்தைகளை கூட்டி சென்றால் அவர்களை அழ வைத்தே நமக்கு தேவையான ஐஸ்கிறிம் சோடா என்பவறையும் இலகுவில் பார்சல் செய்து வீட்டுக்கு கொண்டுவரலாம்

7) பிளேட் செய்யும் சாப்பாட்டு பந்தி எனில் பிளேட் செய்யும் இடத்துக்கே போய் பையை நீட்டுவதே உசிதம்

8)அம்மா தனிய வீட்ட
 அப்பாபாவுக்கு வர ஏலாது
சீனியமாவுக்கு வருத்தம் தானே

என கொஞ்சம்  செண்டிமெண்டலான விடயங்களை சொல்லி பார்சல் கட்டி கொள்ள வேண்டும் .

9) சோறு பகிரும் பொடியன்கள் வேருத்து விருவிருத்து  அவதிப்பட்டு திரியும் போது ..

தம்பி இதுக்க கொஞ்சம் குழம்பு ஊத்து சொதி ஊத்து என உங்கள் சொப்பின் பையை காட்டவே காட்டாதீர்கள்

ஒரே கத்தாய் கத்தி ஊரை கூட்டிவிடுவானுள்
கொஞ்சம் அவர்கள் ரெஸ்ட்டாக இருக்கும் போது

"தம்பிமாருக்கு கடும் கஸ்டம்தான் போல" என பேச்சு கொடுத்து கொண்டே நம்பையை நிரப்பி கொள்ளும் வழியை பார்க்க வேண்டும்

10) இன்னும் இலகுவான வழி விசேட வீட்டு காரர்களிடமே போய் வெட்கத்தினை விட்டு ( வெட்கத்தை பார்த்தா பார்சல் கிடைக்குமா?)
கேட்டு விட்டால் எல்லாம் ரெண்டு ரெண்டாகவே அவர்களே  கட்டி தந்து விடுவார்கள்

லஞ்சீட் பேப்பர் என அவர்கள் தேடும் போது உங்கள் பையில இருந்து எடுத்துகொடுத்து அவர்களை பரவச படுத்தலாம்

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..