யாழ்ப்பாணப் பள்ளிக்கூட மதில் பாய்ந்து கோழிக் கொத்து சாப்பிட்ட கதை!! Share

யாழ் இந்து மாணவர்களின் வாழ்வில் இருந்து நீலாம்பரி உணவகம் பிரிக்கமுடியாத ஒன்று என்றால் மிகையில்லை. பாடசாலை நேரத்திலேயே சிலர் எப்படியாவது மதில் பாய்ந்து போய் நல்ல கட்டுக்கட்டி விடுவார்கள்.

 தரம் ஒன்பது படிக்கும் போது நானும் Aberam Wijayakumar உம் மற்றவர்களைக் கழற்றிவிட்டுவிட்டு ( காசு கொஞ்சம் தான் கிடந்தது ) மதில் பாய்ந்து நீலாம்பரிக்குப் போய்ட்டம்.

ஒரு full கோழிக்கொத்து 2 ஆக்கி சாப்பிட்டாச்சு , அபிராம் சொன்னான் மச்சான் pineapple juice குடிச்சால் தான் செமிக்கும் எண்டு 2 juice உம் வாங்கிக் குடிச்சாச்சு , பில் வந்தால் இருக்கிற காசை விட 50 ரூபா கூடிப்போச்சு. ( கொத்து விலை கூட்டிப் போட்டாங்கள் ) இரண்டு பேருக்கும் ஐந்தும்கெட்டு அறிவும்கெட்ட நிலை ஆளையாள் பாத்து முழுசிக்கொண்டு நிக்க கடைக்காரனுக்கு கட்டம் விளங்கிட்டுது , வழமையாகக் கண்ணண் அண்ணா நிண்டால் ஆளைத்தெரியும் சொல்லிப்போட்டு பிறகு காசுகொண்டு போய்க் குடுக்கலாம் ஆனால் அண்டைக்கெண்டு பாத்து கண்ணன் அண்ணாவையும் காணலை, நிண்டவங்கள் அதிபருக்குப் phone பண்ணப்போறம் எண்டாங்கள் , school uniform ஓட பாடம் நடக்கிற நேரம் வெளியவந்தது தெரிஞ்சால் கண்டிப்பா பிரின்சி அப்பா அம்மாவைக் கூப்பிட்டு அள்ளிவைக்காமல் விடாது ( ஏற்கனவே நாங்கள் இருவரும் எமது வீரதீரச் சாகசங்கள் மூலம் wanted list இல் இருப்பதால் living certificate ஐ கொண்டு போங்கடா எண்டாலும் ஆச்சரியமில்லை ) எண்டது புரியவே , அண்ணா அதிபருக்குப் phone பண்ணாதீங்கோ pls எண்டம் , அதுக்கு அந்தக் காட்டெருமை, சரி அப்பிடியெண்டால் இரண்டுபேரும் போய் ஆளுக்கு 5kg வெங்காயம் உரிச்சுத்தாங்கோ எண்டான் நாங்கள் முழுசவே இல்லாட்டில் 5 தேங்காய் துருவித்தரச்சொன்னாங்கள்.

எங்களுக்கும் வேற வழியில்லை அதிபரிட்ட போய் அடிவாங்கி அப்பா அம்மாவைக் கூட்டிக்கொண்டு வாறதை விட தேங்காய் துருவுறதே மேல் எண்டு நினைச்சு சரி அண்ணா தேங்காயைத் தாங்கோ எண்டம் (கண்ணில தண்ணிவராக்குறை, வீட்டில ஒரு துரும்பு வேலைகூடச் செய்யாமல் செல்லமா வளந்துட்டமே ) அதுக்கு கடைக்காரன் சிரி சிரி எண்டு சிரிச்சுப்போட்டு அடேய் தம்பி நான் சும்மா விளையாட்டுக்கடா எண்டு சொல்லி ஆளுக்கு 2 பெரிய கண்டோசும் தந்து அனுப்பி விட்டாங்கள். பிறகென்ன முகமெல்லாம் பல்லுத்தான்

நன்றி

vithu RKO facebook.

Image may contain: text

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..