சாமியாரின் ஆண் உறுப்பை எவ்வாறு வெட்டினேன்!! இளம்பெண்ணின் வாக்குமூலம் இதோ! (Video) Share

பாலியல் வன்­கொ­டுமை செய்ய முயன்ற சாமி­யாரின் ஆணு­றுப்பை துண்­டித்த பெ‌ண்ணின் செயலை கேரள முத­ல­மைச்சர் பின­ராயி விஜயன் பாராட்­டி­யு‌ள்ளார்.

 

திரு­வ­னந்­த­புரம் அருகே உள்ள பேட்டை பகு­தியை சேர்ந்த 23 வயது சட்­டக்­கல்­லூரி மாண­வியின் தந்தை பக்­க­வாத நோயால் பாதிக்­கப்­பட்­டுள்ளார். இதனால் இந்த குடும்­பத்­துக்கு, கணே­சா­னந்தா தீர்த்­த­பாடம் என்­கிற ஹரி­சு­வாமி (54 வயது) என்ற சாமியார் சில ஆண்­டு­க­ளுக்கு முன் அறி­மு­க­மானார். அடிக்­கடி இளம்­பெண்ணின் வீட்­டுக்கு வந்த அவரை நம்பி இப்­பெண்ணின் தாயார் தனது வீட்டில் அடிக்­கடி பூஜை செய்­துள்ளார்.

கடந்த 6 வரு­ட­ங்களாக அந்த வீட்­டுக்கு சென்று பூஜைகள் செய்து வந்த சாமியார், குறித்த இளம்­பெண்­ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்­துள்ளார். இது தொடர்பில் தன் தாயா­ரிடம் அப்பெண் தெரி­வித்த போதிலும் அவர் அதை கண்­டு­கொள்­ள­வில்லை எனத் தெரி­கி­றது.

இதை­ய­டுத்து சாமி­யா­ருக்கு தண்­டனை கொடுக்க முடிவு செய்த இளம்பெண். நேற்று முன்­தினம் இரவில் சாமியார் பாலியல் வன்­கொடுமையில் ஈடு­பட்­ட­போது கத்தி ஒன்றை எடுத்து சாமி­யாரின் ஆணு­றுப்பை வெட்­டி­யுள்ளார். இரத்த வெள்­ளத்தோடு அங்கிருந்து தப்பியோடிய சாமியார் தன் சீடர் ஒருவரின் உதவியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவ­ருக்கு அறு­வை­சி­கிச்சை செய்­யப்பட்­டது. இந்­நி­லையில் தானே தனது ஆணு றுப்பை அறுத்­துக்­கொண்­ட­தாக அந்­த சா­மியார் தெரி­வித்­துள்ளார். இளம் பெண் ணின் இந்த துணிச்சலானசெயலுக்கு பலர் பாராட்டுத் தெரி­வித்­துள்­ளனர்.

கேரள முத­ல­மைச்சர் பின­ராயி விஜயன், இச் செயல் துணிச்­ச­லா­னது பாலியல் வன்கொடுமையில் ஈடு­பட முனை­வோ­ருக்கு இது எச்­ச­ரிக்‌கை’ என்று கூறியுள்ளார். வரும் காலங்களில் பாலியல் வன்­கொ­டு­மையில் இருந்து பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள இதுபோன்ற துணிச் சலான செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..