பருத்தித்துறையில் பஸ்ஸில் ஏறினாள் ஒரு பருவக்கிளி.. Share

மனதை மயக்குறாளே மந்திகையில் மறைந்திடுவாளோ???? நெஞ்சை பஞ்சாக்கிறாள் நெல்லியடியில் நழுவிடுவாளோ??!


வெளியே எட்டி பார்க்கிறாள் வெள்ளைறோட்டில் வெளியேறிடுவாளோ??!!!
வார்த்தைகளால் வருடுகிறாள் வல்லைவெளியில் வந்திறங்குவாளோ????
அம்சமாய் இருக்கிறாள் அச்சுவேலிக்காரியோ?????!
ஆடம்பரம் ஆகலும் இல்லை ஆவரங்கால் அவள் ஆறுமிடமோ??!!

புத்தாடையில் புறம் பார்க்க வைக்கிறாள் புத்தூர் அவள் புகலிடமோ????
சின்ன சிரிப்பால் சிதறடிக்கிறாள் சிறுப்பிட்டியில் எனை சிறைப்பிடிப்பாளோ????
நினைவில் நிஜத்தை கலக்கிறாள் நீர்வேலியில் நிறுத்திடுவாளோ???
புன்னகையால் பூரிக்க வைக்கிறாள் பூதர்மடத்தில் பூரத்தியாகிடுமோ???

கோட்டைகளை மனதில் கட்ட வைக்கிறாள் கோப்பாயில் இடிந்திடுமோ???
இமைக்காமல் ரசித்து இதயத்தில் இடம் பிடித்த அவள் இடம் இருபாலையோ???
கண்களால் கதைபேசி கடைசியில் கட்டைபிராயில் கால்பதிப்பாளோ???!!
கன்னியவள் கல்வி என்று கல்வியங்காட்டில் கரையிறங்குவாளோ???

முன்னுக்கு முன்னேறுகிறாள் முத்திரைசந்தியில் முன்னிறங்குவாளோ????
நல்முகத்துடன் நகர்கிறாள் நல்லூரில் நழுவிடவோ????!!!!!!!
ஆ என்ற வாய்கள் மூடமுதல் ஆனைப்பந்தியில் ஆறிடுவாளோ????
ஆசைகள் அனைத்தையும் ஆரியகுளத்தில் மூழ்கடிப்பாளோ???

ஆனந்த மழை ஆஸ்பத்திரியடியில் முடிவு ஆகிடுமோ??????
யாழ்ப்பாண நகரின் யாழ்தேவி அவளோ???!!
மறுபடி பார்க்க வாய்ப்புகள் கூடுமோ????

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..