அடுத்த முதல்வர் சி.வி.கே.சிவஞானம்!! சயந்தன் உறுதியாக கூறுகின்றார்!! Share

வட மாகாண முதலமைச்சரை மாற்றுவது உறுதி என தமிழரசு கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், புதிய முதலமைச்சராக சீ.வி.கே.சிவஞானத்தை நியமிப்பதற்கு அதிக பெரும்பான்மை கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அடுத்த படியாக பெரும்பான்மை வாக்குகளை சத்தியலிங்கம் பெற்றுள்ளதாகவும் தமிழரசு கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெரும்பான்மையை நிரூபித்து எப்படியும் சீ.வி.கே.சிவஞானத்தை வட மாகாண முதலமைச்சராக்குவது உறுதி எனவும் தமிழரசு கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..