மனைவியை கேலி செய்தவருக்கு நேர்ந்த கதி Share

மனைவியை கேலி செய்தவருக்கு நேர்ந்த கதி

நண்பர் ஒருவரின் மனைவியை அடிக்கடி கேலி, கிண்டல் செய்து வந்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சிலாபம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தனது மனைவியை கிண்டல் செய்து அவளைக் கோபப்படுத்தாதே என பல முறை எச்சரித்தும் அதனை பொருட்படுத்தாத காரணத்தினால் இன்று கிண்டல் செய்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில் கொலையுண்ட நபரும், கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபரும் மிக நெருங்கிய நண்பர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மனைவியை கிண்டல் செய்ததனை தாங்கிக் கொள்ள முடியாத நபர், தனது நண்பனை இன்று அதிகாலை வீடு தேடிச் சென்று கூரிய ஆயுதமொன்றினால் தலையில் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் குறித்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதலை நடத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..