இன வன்முறைகளைத் தூண்டும் அரசியல்வாதிகள் குறித்து விசாரணை? Share

இன வன்முறைகளைத் தூண்டும் அரசியல்வாதிகள் குறித்து விசாரணை?

இன மற்றும் மத வன்முறைகளைத் தூண்டும் அரசியல்வாதிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். நாட்டின் சில அரசியல்வாதிகளின் ஊடக அறிக்கைகள் மற்றும் மேடைப் பேச்சுக்கள் இன, மதக் குரோதத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதா? என்பது குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு குற்றமிழைக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரின் ஆலோசனையுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன அல்லது மதக் குரோதத்தை தூண்டுவதற்கு எவருக்கும் அனுமதியில்லை எனவும் அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..