சாமியாரின் மர்ம உறுப்பை துண்டித்த மாணவி மாயம் Share

கேரளாவில் சாமியாரின் மர்ம உறுப்பை துண்டித்த மாணவியை கும்பல் ஒன்று கடத்தி சென்றுள்ளதாக அவரது காதலன் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த கணேசானந்தா என்ற சாமியார், சட்டக் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது சாமியாரின் மர்ம உறுப்பை மாணவி துண்டித்தார் என செய்திகள் வெளியாகின.

இதனிடையே, தான் சாமியார் என்பதால் தனது மர்ம உறுப்பு தனக்கு அவசியப்படாது என்பதால் தானே அதனை அறுத்துக் கொண்டதாக சாமியார் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இடனிடைய் இந்த வழக்கில் சாமியாரின் உறுப்பை தாம் துண்டிக்கவில்லை எனவும், காவல் துறையினரே அவ்வாறு கதை கட்டி விட்டனர் என கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குள்ளான மாணவி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவியை சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த சாமியாரின் ஆட்கள் கடத்தி வைத்துள்ளதாக, அவரின் காதலன் கேரள உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மேலும் சமீபத்தில் மாணவி அளித்த மாற்று வாக்குமூலம் கூட சாமியார் ஆட்கள் மிரட்டுதலின் பேரில் தான் என்றும், சாமியாரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவியே அவரின் மர்ம உறுப்பை துண்டித்தது நிஜம் என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் அந்த மாணவியின் ஆண் நண்பர் ஐயப்பதாஸ் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது பதிலளிக்குமாறு பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..