டொனால்ட் ட்ரம்ப் விரைவில் படுகொலை செய்யப்படுவார் - ஹொலிவுட் நடிகர் பரபரப்பு தகவல் Share

அமெரிக்காவின் சமகால ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரைவில் கொலை செய்யப்படுவார் என பிரபல ஹொலிவுட் நடிகர் ஜானி டெப் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.



கடந்த 1865ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன், நடிகர் ஜான் வில்க்ஸ் பூத் என்பவரால் கொலை செய்யப்பட்டார்.

அமெரிக்க வரலாற்றில் ஒரு நடிகர் ஒருவரினால் ஜனாதிபதி கொலை செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுதான்.

இந்நிலையில் மீண்டும் ஒரு முறை நடிகர் ஒருவர் ஜனாதிபதியை கொலை செய்யும் நேரம் வந்துவிட்டது என்று 'பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்'. படத்தின் நாயகன் ஜானி டெப் விழா ஒன்றில் பகிரங்கமாக கூறியுள்ளார்

அமெரிக்காவில் நடைபெற்ற கிளாஸ்டன்பரி என்ற விழாவில் கலந்து கொண்ட ஜானி டெப் இந்த தகவலை வெளியிட்டார்.

மீண்டும் ஒருமுறை அதிபரை ஒரு நடிகர் கொலை செய்யும் நேரம் வந்துவிட்டது என்று பேசியபோது அந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடையாமல் கைதட்டி உற்சாகப்பட்டனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே ஹொலிவுட் நடிகர்களுக்கு அவரை பிடிக்கவில்லை என்பதும் சமீபத்தில் நடந்த ஆஸ்கார் விருது வழங்கு விழாவில் கூட டிரம்ப் நடிகர்களால் கிண்டலடிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com