மெக்சிகோவின் பிரபல மாடல் அழகி சுட்டுக் கொலை Share

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பிரபல அழகி, தனது தந்தையின் கடையில் இருந்தபோது மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் லிஸ்பெத் போர்டிலோ ரோட்ரிகஸ். இளம் மாடல் அழகியான இவர், சென்ற வாரம் வியாழக்கிழமை சிகுயாகுவா மாநிலம் ஜுடெக்னியா பகுதியில் உள்ள தனது தந்தைக்கு சொந்தமான கடையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் லிஸ்பெத்தை நோக்கி சுட்டான். அதன் பின் அங்கிருந்த காரில் தனது உடமைகளுடன் தப்பிச் சென்று விட்டான். இதில் படுகாயம் அடைந்த லிஸ்பத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. லிஸ்பெத் மீது 14 குண்டுகள் பாய்ந்துள்ளன. அதனால் இந்த தாக்குதல் கொள்ளை முயற்சியின்போது நடத்தப்படவில்லை என்பது தெரிகிறது. அவர் கொல்லப்பட்டதிற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

லிஸ்பெத் செவிலியராகவும், மியூசிக் வீடியோவிற்கு மாடலாகவும் பணியாற்றி வந்துள்ளார். இவர் கெரின்சியா மிட்ஸ் மியூசிக் குழுவுடன் சேர்ந்து நடித்த மியூசிக் வீடியோ மிகவும் பிரபலமானது. ஆனால் அந்த மியூசிக் குழுவைச் சேர்ந்தவர்கள் அவரது மரணம் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..