தமிழக ஆளுநராகிறார் தமிழிசை...? Share

தமிழக ஆளுநராக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக உள்ள வித்யாசாகர் ராவ் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் ஆளுநராக நிடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் திரைமறைவு அரசியலை பாஜக நிகழ்த்தி வருகிறது. இதற்கு தற்போது புதுச்சேரி மாநிலமும் விதிவிலக்கு அல்ல. சமீபத்தில் புதுச்சேரியில் நியமன எம்.ஏல்.ஏக்கள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

அம்மாநில பாஜக பொறுப்பாளர்களை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி எம்.எல்.ஏக்களாக நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் திமுக, அதிமுகவை நாங்கள் ஆட்டிவைப்போம் என பகிரங்கமாகவே கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் 2019 ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் பாஜகவை வலிமைப்படுத்த பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. இதனால் தற்போது தமிழக பாஜக தலைவராக உள்ள தமிழிசையை ஆளுநராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தமிழக பாஜக தலைவராக கே.டி.ராகவன் உள்ளிட்ட தமிழக பாஜக முக்கிய தலைவர்களின் பெயர்களும் பரிசிலனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..